மற்றுமொரு துப்பாக்கி சூடு - இளைஞன் ஸ்தலத்தில் பலி
Sri Lanka Police
Shooting
Sri Lanka
By Sumithiran
மற்றுமொரு துப்பாக்கி சூடு
காவல்துறை உத்தியோகத்தரின் துப்பாக்கியை நபர் ஒருவர் கைப்பற்ற முயற்சித்த சம்பவத்தில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் மொரவக பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
போதைப்பொருள் தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலையடுத்து நெலுவ காவல் நிலைய அதிகாரிகள் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த வேளையில் காலி, நெலுவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர்கள் தப்பியோட்டம்
மேலும் 3 சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நெலுவ காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 1 நாள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி