மாணவர்களிடையே ஸ்மார்ட் போன் பாவனைக்குத் தடை - ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்
பாடசாலை செல்லும் மாணவர்களிடையே கைத்தொலைபேசி பாவனையை தடை செய்ய வேண்டும் எனக் கோரி வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந் நாட்டில் தற்பொழுது புகைப்பொருள் பாவனை குறைவடைந்து இருப்பதை காணக் கூடியதாகவுள்ளது.
ஆனால் போதைப்பொருள் பாவனை அதிகரித்து செல்வதை காணக் கூடியதாகவுள்ளது.
மாணவர்களிடையே ஸ்மார்ட் போன் பாவனை
இதனை கட்டுப்படத்துவதற்கு நாம் பாடசாலை மட்டத்திலும் கிராமங்களிலும் செயற்பட்டு வருகின்றோம். ஆனால் போதைப் பாவனை குறைவடைவதை காணக் கூடியதாக தெரியவில்லை.
இதனால் கூடுதலாக பாதிப்படைவது இளம் சந்ததியினர் ஆவார் குறிப்பாக மாணவர் சமுதாயம் ஆகும். மேலும் இப்படி இருக்கும் பொழுது ஒரு படி மேலாக தற்பொழுது மாணவர்களிடையே கைத்தொலைபேசி (ஸ்மார்ட் போன்) பாவனையும் காணக் கூடியதாக உள்ளது.
இந்த பாவனையை பாடசாலை மாணவர்கள் மட்டில் கட்டுப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
பொது இடங்களில் புகைப்பொருள் பாவனை
தாங்கள் சிறிலங்காவை துப்பரவு செய்ய முன் வந்ததை மனதார பாராட்டுகின்றோம். இதனைப் போல் ஸ்மார்ட் போன் பாவனையை மாணவர்களிடையே துப்பரவு செய்ய வேண்டும்.
அதற்கான சில ஆலோசனைகளை முன்வைக்கின்றோம். அவையாவன,
1.பொது இடங்களில் புகைப்பொருள் பாவித்தால் தண்டிக்கப்படுகின்றார்களோ, அதே போல் பாடசாலை செல்லும் மாணவர்கள் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் ஸ்மார்ட் போன் பொது இடங்களில் பாவித்தால் தண்டிக்கப்பட வேண்டும்.
2. குறிப்பிட்ட மாணவர்கள் வீட்டில் ஸ்மார்ட் போன் பாவிப்பதனை கண்டால் மாணவர்களின் பெற்றோர்களை தண்டிக்க வேண்டும்.
3. பிரத்தியேக வகுப்பு நடாத்தும் ஆசிரியர்கள் போன் மூலம் வகுப்பு எடுத்தால் அந்த ஆசிரியரை தண்டிக்க வேண்டும். போன் பாவனையை மாணவர்களிடையே தடை செய்ய வேண்டும் இதற்கு காரணம் பெற்றோருக்கு தெரிந்த விடயங்கள் எல்லாம் இந்த போன் மூலம் மாணவர்கள் அறிகின்றார்கள். ஆகவே போன் பாவனையை தடை செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

