காலியில் கொடூர கொலை! மனைவியின் தலையை வெட்டி வீசிய கணவர்
காலி, நெலுவ பகுதியில் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்த கணவர் காவல்துறையில் சரணடைந்துள்ளார்.
இதன்போது துண்டிக்கப்பட்ட தலையை குறித்த பெண்ணுடன் திருமணத்துக்கு புறம்பான உறவில் இருந்த நபரின் வீட்டுக்கு முன் வீசி எறிந்ததாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்களை காலி மாவட்ட காவல்துறை மா அலுவலகம் வெளியிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
கொலை பின்னணி
நெலுவ, சியம்பலகஹேன, ஹப்பிட்டிய பகுதியில் வசிக்கும் முப்பத்திரண்டு வயதுடைய மூன்று குழந்தைகளின் தாயான ஒரு பெண்ணே இந்த துயர சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.

காவல்துறை விசாரணைகளின்படி, இந்த கொடூரமான கொலையானது குடும்பத் தகராறின் விளைவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்த பெண் தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஒருவருடன் திருமணத்திற்குப் புறம்பான உறவு வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விடயம் கண்காணிப்பு கருவியில் பதிவானதைத் தொடர்ந்து, கணவன்-மனைவி இடையே இந்த விவகாரம் தொடர்பாக மோதல் அதிகரித்துள்ளது.
இதன்போது ஆத்திரமடைந்த கணவர் தேயிலை மரங்களை வெட்டப் பயன்படுத்தப்படும் கூர்மையான கத்தியால் தனது மனைவியின் கழுத்தை அறுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காவல்துறை தகவல்
பின்னர் சந்தேக நபர் துண்டிக்கப்பட்ட தலையை குற்றம் நடந்த இடத்திலிருந்து சுமார் இருநூறு மீட்டர் தொலைவில் இருந்த திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட்ட நபரின் வீட்டிற்கு முன் தூக்கி வீசியுள்ளார்.
பின்னர் நெலுவ காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்ததாக கூறப்படுகிறது.
இவ்வாறு சரணடைந்த சந்தேக நபர் இராணுவ சேவையிலிருந்து வெளியாகிய ஒரு முன்னாள் அதிகாரி என்பதை காவல்துறை மேலும் வெளிப்படுத்தியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |