திருமலையில் சர்ச்சையை கிளப்பிய விகாரை விவகாரம்! அகற்றப்படும் கட்டுமானம்

Trincomalee Sri Lankan Peoples Law and Order
By Dhilak Feb 20, 2026 07:13 AM GMT
Report
Courtesy: துரைநாயகம் சஞ்சீவன்

திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக இயங்கி வந்த சிற்றுண்டிச்சாலையின் சட்டவிரோத கட்டுமானம் அகற்றப்பட்டு தற்காலிக அனுமதிக்கு ஏற்றவாறு கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பிரட்ரிக் கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விஹாரயின் வளாகத்திற்குள் அனுமதி பெறாது சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த உணவகக் கட்டிடம் புதன்கிழமை (18) இரவு முதல் அகற்றப்பட்டு அப்பகுதியில் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு ஏற்றவகையில் குறித்த கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிரித்தானியாவில் உரையாற்றும் வாய்ப்பு ரத்து! நாமலுக்கு ஏற்பட்ட பெரும் ஏமாற்றம்

பிரித்தானியாவில் உரையாற்றும் வாய்ப்பு ரத்து! நாமலுக்கு ஏற்பட்ட பெரும் ஏமாற்றம்


விகாராதிபதியின் கோரிக்கை

ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விஹாரையினுடைய விகாராதிபதியின் கோரிக்கைக்கு அமைவாக 127 சதுர அடியில் தற்காலிக கடை ஒன்றை அமைப்பதற்கு மட்டுமே கரையோர பாதுகாப்பு திணைக்களம் அனுமதி வழங்கி இருந்தது.

திருமலையில் சர்ச்சையை கிளப்பிய விகாரை விவகாரம்! அகற்றப்படும் கட்டுமானம் | Trinco Vihara Issue Removal Illegal Construction

இருப்பினும் குறித்த அனுமதியை பயன்படுத்தி 405 சதுர அடி பரப்பளவு கொண்ட நிரந்தரக் கட்டிடம் மற்றும் மூன்று கூடுதல் குடிசைகள், நிரந்தர வேலி ஆகியவை அனுமதி பெறாது அமைக்கப்பட்டிருந்தன.

இவற்றை அகற்றுமாறு குறித்த திணைக்களத்தினால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வந்ததுடன் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கையினையும் கடந்த வருடம் நவம்பர் மாதம் 4ஆம் திகதி மேற்கொண்டிருந்த நிலையில் குறித்த விகாராதிபதி துறைமுக காவல்நிலையத்திற்கு சென்று அவர்கள் ஊடாக கரையோர பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒருவாரகால அவகாசம் கேட்டதுடன் அனுமதி இன்றி அமைக்கப்பட்டிருந்த மூன்று கூடுதல் குடிசைகளை அகற்றியிருந்தார்கள்.

வழக்கு விசாரணை

இதன்பின்னர் 19.11.2025 அன்று குறித்த சட்டவிரோத கட்டடம் அகற்ற திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் நவம்பர் மாதம் 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் விகாரைக்கான கட்டுமானங்கள் அமைக்கப்பட்டு புத்தர்சிலை வைத்து குறித்த விடயம் சர்ச்சையாகியிருந்ததுடன் குறித்த விடயம் திசைமாற்றப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

திருமலையில் சர்ச்சையை கிளப்பிய விகாரை விவகாரம்! அகற்றப்படும் கட்டுமானம் | Trinco Vihara Issue Removal Illegal Construction

இதேவேளை குறித்த சட்டவிரோத சிற்றுண்டிச்சாலை தொடர்பில் அன்றைய திருகோணமலை நகரசபையால் திருகோணமலை நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதன் பின்னர் கொழும்பு நீதிமன்றில் விகாராதிபதியால் கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் அங்கு இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. 

இது தொடர்பான வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (20.02.2026) கொழும்பு நீதிமன்றில் இருந்ந நிலையிலேயே குறித்த சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்பட்டு தற்காலிக அனுமதிக்கு ஏற்றவாறான கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சட்டத்தரணி மற்றும் மனைவி கொலை! துப்பாக்கிதாரி உள்ளிட்ட சந்தேகநபர்கள் அடையாளம்

சட்டத்தரணி மற்றும் மனைவி கொலை! துப்பாக்கிதாரி உள்ளிட்ட சந்தேகநபர்கள் அடையாளம்

தொலைபேசி அறிக்கை இல்லாமல் பின் தள்ளப்படும் முக்கிய படுகொலை வழக்குகள்!

தொலைபேசி அறிக்கை இல்லாமல் பின் தள்ளப்படும் முக்கிய படுகொலை வழக்குகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025