ருமேனியாவில் மண்மேடு சரிந்து விழுந்ததில் இலங்கை பிரஜை ஒருவர் பலி
ருமேனியாவின் இல்ஃபோவ் கவுன்டியில் உள்ள கணேசா பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றொருவர் மீட்க்கப்பட்டுள்ளார்.
கணேசாவில் உள்ள ஸ்டெஃபான் செல் மாரே தெரு அருகே கழிவுநீர் அமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இருவரே இவ்வாறு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
மண் மேட்டிற்கு அடியில் புதைந்திருந்த இரண்டு இலங்கைத் தொழிலாளர்களை மீட்பதற்காக 11 மணி நேரத்திற்கும் மேலாக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
11 மணி நேர தேடுதல்
வீதியோரத்தில் ஆறு மீட்டர் ஆழமுள்ள ஒரு குழியில் வேலை செய்துகொண்டிருந்தபோது, திடீரென ஒரு மண் மேடு அவர்கள் மீது சரிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் ஆறு மணி நேரக் கடுமையான முயற்சிக்குப் பிறகு, தீயணைப்பு வீரர்கள் முதல் தொழிலாளியை உயிருடன் மீட்டுள்ளனர்.
இடுப்பளவு ஆழத்தில் புதைந்திருந்த அவர், காயமின்றி சுயநினைவுடன் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
முதல் தொழிலாளி மீட்கப்பட்ட பிறகு, மண்ணுக்கு அடியில் புதைந்திருந்த மற்றொரு இலங்கையரைத் தேடும் பணி தொடர்ந்துள்ளது.
இருப்பினும், மேலும் 11 மணி நேரக் கடினமான தேடலுக்குப் பிறகு, அதிகாலை 3.30 மணியளவில் அவர் கண்டுபிடிக்கப்பிடிக்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |