பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜாவின் Northern Uni விஜயம் : ஊடகங்களுக்கு அழைப்பு
லெஸ்டர் பல்கலைக்கழகத்தின் தலைவர் மற்றும் துணைவேந்தரான பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜா, எதிர்வரும் 23.11.2026 அன்று SLIIT Northern Uni நிறுவனத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவரும் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.
இவ்விஜயமானது சர்வதேசக் கல்வி மேம்பாடு, கல்விசார் ஒத்துழைப்பு, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவித்தல், முதுமானி பட்டப்படிப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் மருத்துவக் கல்வியை அறிமுகப்படுத்துதல் போன்ற எதிர்காலக் கல்வி அபிவிருத்தி முயற்சிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய நிகழ்வாக அமைகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு எதிர்வரும் 23.11.2026 (திங்கட்கிழமை) மதியம் 12.00 மணிக்கு, அரசடி வீதி, கந்தர்மடத்தில் அமைந்துள்ள SLIIT Northern Uni வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் ஊடக நிறுவனங்களின் சார்பாக ஒவ்வொரு பிரதிநிதிகளை இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |