அதிர வைக்கும் செம்மணி அறிக்கை..! இயற்கை பேரிடர், தொற்று நோயால் இறந்தவர்கள் - வெடிக்கும் சர்ச்சை
செம்மணிப் புதைகுழியில் இருந்து பெருந்தொற்றுக்குப் பிற்பட்ட நாணயங்களே மீட்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
செம்மணிப் புதைகுழியில் பெருந்தொற்றால் இறந்தவர்கள் புதைக்கப்பட்டிருக்கச் சாத்தியம் உள்ளதாக தடயவியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ அறிக்கை வழங்கியுள்ளார்.
இந்தக் கருத்தை - அறிக்கையை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். யாழ்ப்பாணத்தில் கடந்த 1919 ஆம் ஆண்டிலேயே பெருந்தொற்றொன்று (அம்மை நோய்) ஏற்பட்டது.
ராஜ் சோமதேவ அறிக்கை
ஆனால் 1920 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்டகால நாணயங்களே செம்மணிப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டன. எனவே, இதிலுள்ள வெளிப்படையான முரண்தன்மையை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

செம்மணிப் புதைகுழி தொடர்பான காலப்பகுதியை பேராசிரியர் ராஜ் சோமதேவ முன்வைத்த அறிக்கையின் மூலம் தீர்மானிக்க வேண்டிய அவசியம் நீதிமன்றத்துக்கு இல்லை.
அத்துடன் கார்பன் பரிசோதனை செய்வதையும் நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம். ஏனெனில், மன்னார் உள்ளிட்ட ஒருசில புதைகுழிகள் தொடர்பில் வழங்கப்பட்ட கார்பன் அறிக்கைகள் விசாரணைகள் நீர்த்துப்போகக் காரணமாக அமைந்தன.
எனவே, செம்மணிப் புதைகுழி விடயத்திலும் அவ்வாறு நிலைமை ஏற்படக்கூடாது. மரபணுப் பரிசோதனை மூலமே காலப்பகுதி கண்டறியப்பட வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |