மறைந்த வி.எஸ்.பாபு உடலை சுமந்து சென்ற முதலமைச்சர் விஜய்
கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு உடல்நலக்குறைவால் காலமானார்.
சுவாச பிரச்னை காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சுமார் 70 நாட்களாக சிகிச்சையில் இருந்ததாகவும், நவம்பர் 19 அன்று அவர் உயிர் பிரிந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
மறைந்த எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் இறுதி ஊா்வலம் நேற்று (20.11.2026) வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் நடைபெற்றது.
கிளிநொச்சியில் பெண் 7 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை - போராடிய மக்களை மிரட்டிய காவல்துறை - சபையில் அம்பலப்படுத்திய எம்.பி
இறுதி ஊா்வலம்
இதில் முதல்வா் விஜய், மதிமுக பொதுச் செயலா் வைகோ, அமைச்சா்கள், தவெக எம்எல்ஏக்கள், பாஜக மாநிலச் செயலா் கராத்தே தியாகராஜன், பொதுமக்கள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தவெக கொடி போா்த்தப்பட்ட வி.எஸ்.பாபுவின் உடலை குடும்பத்தினருடன் சோ்ந்து முதல்வா் விஜய் தோளில் சுமந்து சென்று வாகனத்தில் ஏற்றினாா்.
இறுதி ஊா்வலத்தில் காலணி அணியாமல் வி.எஸ்.பாபுவின் மகனை அரவணைத்தபடி விஜய் நடந்து சென்றாா்.
திரு.வி.க.நகா் தாங்கல் மின்மயானத்தில் வி.எஸ்.பாபுவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |