செம்மணியில் என்புத் தொகுதிகள் சாதாரண முறைப்படி புதைக்கப்படவில்லை: நீதிமன்றம் அதிரடி
செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட அனேகமான என்புத் தொகுதிகள் சாதாரண நடைமுறைக்கு அமைய புதைக்கப்படவில்லை என்பது வெளிப்படையானது என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் தெரிவித்துள்ளார்.
செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அதன் போது, பேராசிரியர் ராஜ் சோமதேவ முன்வைத்த தடயவியல் அறிக்கை தொடர்பில் சட்டத்தரணிகள் பலரும் தமது ஆட்சேபனைகளை முன்வைத்தனர்.
செம்மணி மனிதப் புதைகுழி
அதற்கு பதில் அளிக்கும் வகையிலையே நீதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட பல என்புத் தொகுதிகள் அவை சாதாரண நடைமுறைக்கு அமைய புதைக்கப்படவில்லை என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன.
பல என்புத் தொகுதிகள் திசைமாறி புதைக்கப்பட்டுள்ளன. சில என்புத் தொகுதிகள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. அத்துடன், செம்மணிப் புதைகுழி தொடர்பாக ஆரம்பத்தில் பேராசிரியர் ராஜ் சோமதேவ வழங்கிய அறிக்கைகளுக்கும், இறுதியாக வழங்கிய அறிக்கைக்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது.
இறுதி அறிக்கையில் குறிப்பிட்ட விடயங்களை அவர் தனது ஆரம்பகட்ட அறிக்கைகளில் வெளிப்படுத்தாமை பெரும் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது என நீதிபதி தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |