மத்திய பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
மத்திய பெருவில் 6.8 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று (20) வெள்ளிக்கிழமை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், அந்தநாட்டின் தலைநகரான லிமாவிலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரு புவியியல் ஆய்வு நிறுவனத்தின் தகவலின்படி, ஆண்டிஸ் மலைத்தொடரில்அமைந்துள்ள ஜூனின் (Junín) பிராந்தியத்தில், பூமிக்கு அடியில் 129 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கை
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தலைநகர் லிமாவில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றக் கட்டடத்திலிருந்து வெளியேறும் காட்சிகளும் தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளன.

எனினும், இந்த நிலநடுக்கத்தினால் உயிரிழப்புகள் அல்லது சொத்துச் சேதங்கள் ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையோ அல்லது அது தொடர்பான எந்தவொரு அபாய அறிவிப்போ இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் பெண் 7 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை - போராடிய மக்களை மிரட்டிய காவல்துறை - சபையில் அம்பலப்படுத்திய எம்.பி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |