கொழும்பு வாழ் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
கொழும்பில் உள்ள முக்கிய வீதி ஒன்று நேற்று இரவு முதல் முடப்பட்டுள்ளதாகவும் சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறும் காவல்துiறையினர் தெரிவித்துள்ளனர்.
பொரள்ளை, டி.எஸ்.சேனாநாயக்க முச்சந்தியின் கொழும்பு நோக்கி செல்லும் மருங்கின் ஒரு பகுதியை இரவு (20) இரவு 10 மணி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு போக்குவரத்து காவல்துiறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த வீதியில் அமைந்துள்ள கழிவுநீர் வடிகால் கட்டமைப்பில் நீர் வடிந்தோட ஆரம்பித்துள்ளது. இதனால் அதனை புனரமைக்கும் பணிகள் இடம்பெறவுள்ள நிலையில் வீதியை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும்
புனரமைப்பு பணிகள் நிறைவடையும் வரை வீதியின் ஒரு மருங்கு தற்காலிகமாக மூடப்பட்டிருப்பது குறித்து சாரதிகளும், பொதுமக்களுக்கும் கவனத்திற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் காவல்துiறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
வெலிக்கடை பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் ஆயுர்வேத சந்தியிலிருந்து கொட்டா வீதிக்குள் பிரவேசித்து பொரள்ளைக்கு பயணிக்க முடியும்.
அத்துடன் மொடல் பாம் சந்தியிலிருந்து பழைய புல்லர்ஸ் வீதியூடாக மயான சுற்றுவட்டம் நோக்கி பயணிக்க முடியுமெனவும் போக்குவரத்து காவல்துiறையினர் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |