யாழ். மக்களுக்கு மாநகர சபையின் விசேட அறிவிப்பு
யாழ்ப்பாணப் பகுதியில் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாகவும், கழிவுகள் சேகரிப்பு மற்றும் அகற்றல் தொடர்பான விரிவான அறிக்கையை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் யாழ்ப்பாண மாநகர சபை உறுதியளித்துள்ளது.
இந்த அறிவிப்பானது இன்று (20.11.2026) அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தியர் உமா சுகி நடராஜா தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மாநகர சபை இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம்
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவரான நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சுற்றாடல் அமைச்சின் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுரி இசேன், 2017ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, மாநகர சபை உள்ளிட்ட நிறுவனங்கள் திறந்தவெளியில் குப்பைகளை எரிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் மேலதிக விடயங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் 2027ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 03ஆம் திகதிக்கு ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மனுதாரர் சார்பில் சட்டத்தரணிகளான கலாநிதி ரவீந்திரநாத் தாபரே, சவந்தி பொன்னம்பெரும மற்றும் உவிந்தி திசாநாயக்க ஆகியோர் முன்னிலையாகினர்.
சுற்றாடல் அமைச்சு மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுரி இசேன் முன்னிலையானதுடன், யாழ்ப்பாண மாநகர சபை சார்பில் சட்டத்தரணி கே.வி.எஸ். கணேஷராஜன் முன்னிலையானார்.
யாழ்ப்பாணப் பகுதியில் குவிக்கப்படும் குப்பைகள் மற்றும் சுற்றாடலுக்குள் வெளியேற்றப்படும் இரசாயனக் கழிவுகள் காரணமாக காற்று மாசுபாடு ஏற்படுவதாகவும், இந்த நிலைமையைத் தடுக்கப் பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறும் கோரி குறித்த வைத்தியர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
புலம்பெயர் தமிழர்களின் முதுகில் குத்திய அரசாங்கம்! வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகள் என புதிய சட்டமூலம்
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |