தமிழ்ப் பாடசாலை பறிபோகும் அச்சம் : பொலன்னறுவைத் தமிழருக்காக கந்தையா பாஸ்கரனின் வேண்டுகோள்
பொலன்னறுவையில் இருக்கக்கூடிய தமிழ் பாடசாலைகள் நூற்றாண்டைக் கடந்த பாடசாலைகள் என்றால் இந்தப் பூமியில் தமிழர்களின் வரலாறு தமிழர்களின் எவ்வளவு பெரியது என்பதை நீங்கள் அறிய வேண்டும் என்று பாஸ்கரன் கந்தையா தெரிவித்துள்ளார்.
நிறைய தமிழ் கிராமங்கள் மொழி மாற்றம் செய்யப்பட்ட கிராமங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பொலன்னறுவை மாவட்டத்தின் மன்னம்பிட்டிப் பகுதியிலுள்ள சொறிவில் தமிழ் கனிஸ்ட வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பொலன்னறுவையில் வாழக்கூடிய தமிழ் மக்களை தேடி அரசியல்வாதிகள் வருவதில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
உங்களுடைய வாக்குகள் அவர்களுக்கு அதனாலே நீங்களும் அவர்களுக்கு தேவையில்லை. எங்கே வாக்குகள் அதிகமாக வருமோ அங்கேதான் அரசியல்வாதிகள் செல்வார்கள்.
தமிழர்களாகிய நாங்கள் எங்கள் மொழிப்பற்றோடும் இனப்பற்றோடும் எப்பொழுதும் எங்களுடைய அடையாளத்தைப் பேணிப் பாதுகாத்து வாழ வேண்டும், ” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |