ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் : உயர்நீதிமன்றின் தீர்ப்பு
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புச் சட்டமூலமானது அரசியலமைப்பிற்கு முரணானதல்ல எனவும், சில திருத்தங்களுக்கு உட்பட்டு அதனை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் எனவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பினை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (11) நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 12வது பிரிவின் கீழ் இந்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்ததாக சபாநாயகர் மேலும் குறிப்பிட்டார்.
சட்டமா அதிபரால் முன்மொழியப்பட்ட திருத்தம்
தற்காலிக சட்டமா அதிபரால் முன்மொழியப்பட்ட திருத்தங்களையும், நீதிமன்றம் பரிந்துரைத்த மேலதிக திருத்தங்களையும் சட்டமூலத்தின் குழு நிலையில் உள்ளடக்குமாறு நீதிமன்றம் பணித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய, தற்காலிக சட்டமா அதிபர் அளித்த உறுதிமொழியின்படி, இந்தச் சட்டமூலத்தின் நீண்ட தலைப்பு, முன்னுரை மற்றும் குறிப்பிட்ட சில பிரிவுகள் குழு நிலையில் திருத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தற்காலிக சட்டமா அதிபரின் வாக்குறுதிக்கேற்ப, இந்தச் சட்டமூலத்திலிருந்து 6-வது பிரிவு நீக்கப்படும் என்றும், முதலாம் அட்டவணையில் உள்ள 15, 16, 17 மற்றும் 33 ஆகிய அம்சங்கள் நீக்கப்படும் என்றும் சபாநாயகர் அறிவித்தார்.
உயர் நீதிமன்றத்தின் முழுமையான தீர்ப்பை, அன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகளின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் (Hansard) உள்ளடக்குமாறும் சபாநாயகர் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் பெண் 7 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை - போராடிய மக்களை மிரட்டிய காவல்துறை - சபையில் அம்பலப்படுத்திய எம்.பி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |