தொலைபேசி அறிக்கை இல்லாமல் பின் தள்ளப்படும் முக்கிய படுகொலை வழக்குகள்!

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Sri Lanka
By Dharu Feb 20, 2026 06:47 AM GMT
Report

2019 காலப்பகுதியில் இடம்பெற்ற அதிகமான கொலைகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் தொலைபேசி அறிக்கை இல்லாமையாலே இடை நிறுத்தப்பட்டிருக்கின்றன என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மேலும், 2019ஒகஸ்ட் 2ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட சிம் அட்டைகளை மீள பதிவு செய்ய வேண்டும் என ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பு, குறித்த தொலைபேசி நிறுவனங்களை பாதுகாக்கும் நடவடிக்கையாகும் எனவும் முஜிபுர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் நேற்று(19.02.2026) நாடளுமன்றில் கருத்து தெரிவித்த அவர் மேலும் சுட்டிக்காட்டுகையில், 

தனது நற்பெயருக்குக் களங்கம்...! வைத்தியர் சத்தியமூர்த்தி காவல்துறையில் முறைப்பாடு

தனது நற்பெயருக்குக் களங்கம்...! வைத்தியர் சத்தியமூர்த்தி காவல்துறையில் முறைப்பாடு

ஜனாதிபதி வர்த்தமானி

“ஜனாதிபதி வர்த்தமானி அறிவிப்பொன்றை கடந்த வாரம் வெளியிட்டுள்ளார்.

தொலைபேசி அறிக்கை இல்லாமல் பின் தள்ளப்படும் முக்கிய படுகொலை வழக்குகள்! | Sim Card Re Registration Process

அதில் 2019ஆகஸ்ட் 2ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட சிம் அட்டைகளை மீள பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் குறித்த காலப்பகுதிக்கு முன்னரே பல்வேறான படுகொழலைகள் இடம்பெற்றுள்ளன.

இவற்றுக்கு நீதியை நிலைநாட்டுவதாக ஜனாதிபதி உறுதியளித்த பின்னணியில் குறித்த வர்த்தமானி வெளியீடு பல கேள்விகளை எழுப்புகின்றன.

குறிப்பாக நாட்டில் இடம்பெற்ற லசந்த விக்ரமதுங்க, சிவராம், எக்னெலிகொட, மற்றும் தாஜுதீன் போன்றவர்களின் கொலைக்கு நீதியை பெற்றுத்தருவதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்திருந்தார்.

அதில் 2019 ஒகஸ்ட் 2ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட சிம் அட்டைகளின் தகவல்கள் அந்த நிறுவனங்களில் இல்லாமை காரணமாக சட்ட நடவடிக்கைகளுக்கு அது பிரச்சினையாக இருக்கியது.

2019ஒகஸ்ட் 2ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட சிம் அட்டைகளை மீள பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தொலைபேசி சிம் அட்டைகளை விநியோகிக்கும்போது, குறித்த நபரின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என தொலை தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு குறித்த நிறுவனங்களுக்கு நிபந்தனையாக தெரிவித்தே, அந்த நிறுவனங்களுக்கு அதுதொடர்பான அனுமதியை வழங்கி இருக்கிறது.

அதனால்தான் நாங்கள் சிம் அட்டை பெற்றுக்காெள்ளும்போது எமது தேசிய அடையாள அட்டையின் பிரதியை வழங்குகிறோம். அப்படியானால் யாரை பாதுகாக்க ஜனாதிபதி இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டார்.

மறைக்கப்பட்ட இறுதிப்போர் ரகசியங்கள்...! ராஜபக்சக்களின் முகத்திரையைக் கிழிக்கும் பொன்சேகா

மறைக்கப்பட்ட இறுதிப்போர் ரகசியங்கள்...! ராஜபக்சக்களின் முகத்திரையைக் கிழிக்கும் பொன்சேகா

ஜனாதிபதியின் கருத்து  

அத்துடன் ஜனாதிபதி நீதியை நிலைநாட்டுவதாக தெரிவித்த பல கொலைகள் 2019, அதற்கு முன்னரே இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக லசந்த விக்ரமதுங்க, தாஜுதீன் போன்றவர்களின் வழக்கு விசாரணை, தொலைபேசி அறிக்கை இல்லாமையாலே இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தாஜுதீன் கொலை செய்யப்பட்ட தினம் அது தொடர்பில் 60க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் நாரஹேன்பிட்ட காவல்துறை பொறுப்பதிகாரிக்கு சென்றுள்ளன.

அதனை தேடிக்கொள்ள முடியாமல் இருக்கிறது. அப்போது தனியார் சிம் நிறுவனம் ஒன்றின் செயற்பாட்டு அதிகாரியாக இருந்தவர்தான் தற்போது ஜனாதிபதியின் பொருளாதார ஆலாேசகர்.

அதேபோன்று தாஜுதீனின் கொலையை விபத்து என வழக்கின் பீ அறிக்கையை மாற்றிய காவல்துறை குற்றப்பிரிவு எஸ்.பி. தற்போது காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சின் ஆலோசகராக இருக்கிறார்.

இவ்வாறான நிலையில் தாஜுதீனின் கொலையாளியை கண்டுபிடிக்க முடியுமா?

இந்த காலப்பகுதியில் இடம்பெற்ற அதிகமான கொலைகளுக்கு அரசியல் தொடர்பு காணப்படுகிறது. அதேபோன்று அது தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கு தொலைபேசி தகவல் பெறவேண்டியதாகும்.

மோடி - நெதன்யாகு சந்திப்பு: மத்திய கிழக்கில் இந்தியாவின் புதிய அரசியல் வியூகம்

மோடி - நெதன்யாகு சந்திப்பு: மத்திய கிழக்கில் இந்தியாவின் புதிய அரசியல் வியூகம்

ஜனாதிபதியின் வர்த்தமானி

ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம் இந்த கொலைகளுடன் தொடர்புபுடைய யாராவது, மீண்டும் அந்த சிம் அட்டையை பதிவு செய்வார்களா?

தொலைபேசி அறிக்கை இல்லாமல் பின் தள்ளப்படும் முக்கிய படுகொலை வழக்குகள்! | Sim Card Re Registration Process

இது இடம்பெறப்போவதில்லை. அப்படியானால், குறித்த தொலைபேசி நிறுவனங்கள் அந்தபொறுப்பில் இருந்து நீங்கிக்கொள்ள இந்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இடமளிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் சிம் அட்டை விநியாேகித்த நிறுவனத்திடம், சிம் அட்டை உரிமையாளரின் தகவல்கள் இல்லை என அந்த நிறுவனங்களுக்கு தெரிவிக்க முடியாது.

அப்படியென்றால் அந்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் புதிதாக சிம் அட்டைகளை பதிவு செய்த பின்னர், வழக்கு விசாரணைகளின்போது குறித்த தொலைபேசி நிறுவனங்கள், தங்களிடம் அதுதொடர்பான தகவல்கள் இல்லை என தெரிவிக்கும், அப்போது அந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடியாகும்.

அதனால் ஜனாதிபதி இந்த தொலைபேசி நிறுவனங்களை பாதுகாப்பதற்காவா இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது என கேட்கிறோம்? என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025