மறைக்கப்பட்ட இறுதிப்போர் ரகசியங்கள்...! ராஜபக்சக்களின் முகத்திரையைக் கிழிக்கும் பொன்சேகா
இறுதி யுத்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளைக் காப்பாற்றும் வகையிலேயே மகிந்த ராஜபக்ச தரப்புச் செயற்பட்டு வந்ததாகப் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்டு வரும் கருத்துகள் பாரிய அரசியல் விவாதங்களை உருவாக்கியுள்ளன.
நாட்டின் கடந்த கால வரலாற்றில் இதுவரை மறைக்கப்பட்டிருந்த அரசியல் நிலவரங்கள் இவை எனக் குறிப்பிட்டு அவர் தொடர்ச்சியாக முன்வைத்து வரும் தகவல்கள், தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
அத்தோடு, கோட்டாபய ராஜபக்சவின் இராணுவத் தீர்மானங்கள் மற்றும் அவரது போர்க்கால அணுகுமுறைகள் குறித்துப் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ள பொன்சேகா, அவை இராணுவ ரீதியாகப் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தினர் குறித்து மக்கள் மத்தியில் நிலவி வந்த நீண்டகால அரசியல் பிம்பங்களை உடைக்கும் நோக்கில், இத்தகைய தகவல்களை அவர் பகிர்ந்து வருவது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தேர்தல் முடிவுகளின் பின்னரான தற்போதைய அரசியல் சூழலில், பொன்சேகாவின் இந்தத் தொடர் வெளிப்பாடுகள் நாட்டின் கடந்த கால அரசியல் நகர்வுகள் குறித்துப் புதியதொரு விவாதத்தைத் தோற்றுவித்துள்ளன.
இது குறித்து விரிவாக ஆராய்கின்றது கீழுள்ள காணொளி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7