வடக்கில் அதிகரிக்கும் உயிர் மாய்ப்புகள்…. உளவலுவூட்டலை பள்ளிகள் வழங்க வேண்டும்…

Sri Lankan Tamils schools
By Theepachelvan Oct 06, 2026 11:51 AM GMT
Report

கிளிநொச்சியில் அண்மையில் இரண்டு சிறுமிகளின் உயிர் மாய்ப்பு நிகழ்வுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நம்முடைய பள்ளிக்கூடங்களில் சவால்களை முறியடிக்கும் ஆளுமையை பிள்ளைகளுக்கு நாம் ஊட்ட வேண்டும்.

பெற்றொர்கள் மத்தியில் அன்பும் உணர்வுபூர்வமான பிணைப்பும் இருக்கின்ற சூழலில், அங்கே பெரும்பாலும் சமூகச் சவால்களை எதிர்கொள்ளுகின்ற ஆளுமை ஊட்டப்படுவதில்லை.

ஆனால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களில் தாய்மார் எதிர்கொள்ளும் சவால்கள், பிள்ளைகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் போராடுகின்ற ஆற்றலை ஏற்படுத்துகிறது. இளம்பிள்ளைகளின் உயிர் மாய்ப்பு க்களை தடுக்கும் வகையில் நாம் ஆழமான வலுவூட்டலை பள்ளி மட்டங்களில் எடுக்க வேண்டும்.

தேசிய இருப்பைத் தக்கவைக்கும் சாணக்கியம் தமிழரிடம் உள்ளதா... போராடத் தெரியும், தக்கவைக்க தெரியுமா...

தேசிய இருப்பைத் தக்கவைக்கும் சாணக்கியம் தமிழரிடம் உள்ளதா... போராடத் தெரியும், தக்கவைக்க தெரியுமா...

இரண்டு உயிர்கள்

வீட்டில் தந்தை தண்டித்தால் ஒரு மாணவி தன்னை மாய்த்திருக்க, மற்றவர் அயல்வீட்டு இளைஞனின் அச்சுறுத்தலால் தன்னை மாய்த்துள்ளார். ஒரு இளம் உயிர் தன்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் அளவுக்கு சென்றிருக்கிறது என்றால், அந்த உயிரைச் சுற்றி இருந்த சமூகத்தின் தோல்விகளையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

குறிப்பாக இணையம் மனிதர்களை இணைக்கும் ஊடகமாக பார்க்கப்படுகிற அதேவேளை, அவமானப்படுத்தவும், மிரட்டவும், பழிவாங்கவும், ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொதுவெளியில் வீசவும் பயன்படுத்தப்படுகிற இந்தக் காலத்தில் ஊடகப் பாவனையை குறித்து கவனம் கொள்ள வேண்டும்.

இணையவழிக் குற்றங்கள் இன்று வடக்கின் சமூகத்துக்குள் புதியதொரு வன்முறையாக வளர்ந்திருக்கின்றன.

போலிக் கணக்குகள், இணையத் தொல்லைகள், தனிப்பட்ட புகைப்படங்களை அனுமதியின்றிப் பகிர்தல், இணையவழி மிரட்டல், பணம் பறித்தல், பாலியல் அவதூறு, காதல் உறவுகளின் முறிவுக்குப் பின்னரான பழிவாங்கல், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் போலிப் படங்கள் என குற்றங்களின் வடிவங்கள் வேகமாக மாறுகின்றன.

இலங்கையில் பெண்களுக்கு எதிரான இணையக் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் 2023, 2024, 2025 ஆகிய ஆண்டுகளில் பெருமளவில் பதிவாகியுள்ளன.

2025ஆம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிரான இணையக் குற்றங்கள் தொடர்பாக 4,742 முறைப்பாடுகள் பதிவாகியதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது போர் நடப்பது சமூக வலைத்தளங்களிலா......

இப்போது போர் நடப்பது சமூக வலைத்தளங்களிலா......

இணையக்குற்றங்கள்

வடக்கில் இந்தப் பிரச்சினை இன்னும் கவலைக்குரியது. 2020ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் 24 இணையக் குற்ற முறைப்பாடுகள் பதிவாகியிருந்த நிலையில், 2024ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 1,539 ஆக உயர்ந்தது.

2025 ஒக்டோபர் 31ஆம் திகதி வரையில் 2,368 முறைப்பாடுகள் பதிவாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக யாழ்ப்பாணத்தில் கணினிக் குற்ற விசாரணைப் பிரிவு உருவாக்கப்பட்டிருப்பதும் பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துகிறது.

ஒருவருடைய தனிப்பட்ட புகைப்படத்தை எடுத்துக்கொண்டு அவரை மிரட்டுவது ஒரு சாதாரண இணையத் தொல்லை அல்ல. அந்தப் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவது ஒரு கேலியும் அல்ல.

அது ஒரு மனிதனின் மனதின் மீது நடத்தப்படும் வன்முறை. ஒரு பெண்ணின் கண்ணியத்தை சமூகத்தின் முன்னால் கிழித்தெறிந்து, அவள் வாழும் ஒவ்வொரு இடத்தையும் அவளுக்கே அந்நியமாக்கும் கொடுமை.

குறிப்பாக சிறிய சமூகங்களில் ஒரு வதந்தி இணையத்தில் பரவும்போது அதன் தாக்கம் குடும்பம், பாடசாலை, உறவுகள், வேலை, திருமணம் என முழு வாழ்க்கையையும் சுற்றிவளைக்கக்கூடும்.

ஈழச் சிறுவர்கள் மீதான ஒடுக்குமுறைக்குச் சாட்சி பாலச்சந்திரன்..

ஈழச் சிறுவர்கள் மீதான ஒடுக்குமுறைக்குச் சாட்சி பாலச்சந்திரன்..

வடக்கில் அதிகரிக்கும் உயிர் மாய்ப்புக்கள்

இதனுடன் சேர்ந்து வடக்கு - கிழக்கில் உயிர் மாய்ப்புக்களின் அதிகரிப்பும் ஒரு பெரும் சமூக எச்சரிக்கையாக உள்ளது. ஆய்வுகளில் வடக்கின் முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் கிழக்கின் மட்டக்களப்பு போன்ற போருக்குப் பிந்தைய மாவட்டங்களில் உயிர் மாய்ப்புவிகிதங்கள் அதிகமாகக் காணப்பட்டுள்ளன.

குடும்ப வன்முறை, தனிமை, பொருளாதார நெருக்கடி, உளவியல் அழுத்தம் போன்றவை இந்த நிலைமையுடன் தொடர்புடைய காரணிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

2026 ஆகஸ்டில் யாழ்ப்பாணத்தில் மூன்று மாதங்களில் 80 உயிரிழப்புகள் பதிவாகியிருப்பதாகவும், தேசிய அளவிலான விகிதத்தைவிட அங்கு விகிதம் இருமடங்காக இருப்பதாகவும் வடக்கு மாகாண நிர்வாகம் தெரிவித்தது.

குறிப்பாக இளைஞர்களிலும் பெண்களிலும் அதிகரிப்பு காணப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டினர். போர் முடிந்து பதினேழு ஆண்டுகள் கடந்துவிட்டதாக நாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் போருக்குப் பின்னர் உருவான சமூகத்தின் காயங்கள் இன்னும் முழுமையாக ஆறவில்லை. குடும்பங்களை இழந்த குழந்தைகள், பொருளாதாரச் சுமையில் சிக்கிய குடும்பங்கள், வெளிநாடுகளுக்குச் சென்ற பெற்றோரின் பிரிவில் வளரும் பிள்ளைகள், போதைப்பொருள், குடும்ப வன்முறை, வேலைவாய்ப்பின்மை, தனிமை, சமூக அழுத்தம் என பல்வேறு சுமைகள் இளம் தலைமுறையின் மனங்களுக்குள் சேர்கின்றன. அதனுடன் கட்டுப்பாடற்ற இணைய உலகமும் இணைந்துவிட்டது.

என்பிபி அரசின் உண்மை முகம்… திலீபன் சிலை அகற்றல் சொல்லுகிற செய்தி...

என்பிபி அரசின் உண்மை முகம்… திலீபன் சிலை அகற்றல் சொல்லுகிற செய்தி...

உளவலுவூட்டல் பணி

எனவே ஒரு உயிரை இழந்த பிறகு துயரப்படுவது மட்டும் போதாது. உயிர்கள் ஏன் இவ்வளவு எளிதாக முறிகின்றன என்பதை நாம் கேட்க வேண்டும்.

குழந்தைகளிடம் இணையத்தைப் பயன்படுத்துவது எப்படி என்று மட்டும் கற்றுக்கொடுப்பதற்குப் பதிலாக, இணையத்தில் ஏற்படும் வன்முறையை எவ்வாறு எதிர்கொள்வது என்பதையும் கற்றுக்கொடுக்க வேண்டும். பெற்றோர் பிள்ளைகளோடு பேச வேண்டும்.

ஆசிரியர்கள் மாணவர்களின் மனநிலையை கவனிக்க வேண்டும். சமூக அமைப்புகள் ஆலோசனைச் சேவைகளை வலுப்படுத்த வேண்டும். காவல்துறையிடம் முறைப்பாடு செய்வது அவமானம் அல்ல என்ற நம்பிக்கை உருவாக்கப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் காவல்துறையும் அரச திணைக்களங்களும் செயலாற்ற வேண்டும்.

மிக முக்கியமாக, உயிர் மாய்ப்பு எண்ணம் வரும் ஒருவரை நாம் குற்றவாளியாகப் பார்க்கக் கூடாது. அவர் பலவீனமானவர் என்றும் சொல்லக்கூடாது. அந்தக் கணத்தில் அவருக்கு வாழ்க்கையைவிட வலி பெரிதாகத் தெரிகிறது என்பதையே நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அந்த வலியின் கதவைத் திறக்க ஒருவராவது அருகில் இருக்க வேண்டும். அச் சிறுமியின் மரணம் எத்தகைய சூழலில் நிகழ்ந்திருந்தாலும், அது சமூகத்துக்கு கிடைத்துள்ள எச்சரிக்கையொன்று. இணையத்தில் ஒரு சொல் ஒருவரை உடைத்துவிடும்.

ஒரு புகைப்படம் ஒருவரின் வாழ்க்கையை இருளாக்கிவிடும். சாதாரணமான ஒரு இணைய மிரட்டல் ஒரு உயிரை இலேசாக இல்லாமல் ஆக்கிவிடும்.

எனவே,  வடக்கு - கிழக்கின் இளம் தலைமுறை உயிர் மாய்ப்புக்களை நோக்கிச் செல்லாமல், தமது காயங்களையும் தோல்விகளையும் வென்று மீண்டும் வாழக் கற்றுக்கொள்ள வேண்டிய ஆளுமையையும் பெற வேண்டும். அதற்கான உளவலுவூட்டல் பணிகளை ஒவ்வொருவரும் உணர்ந்து செய்வதுதான் இன்றைய காலத்தில் மிக முக்கியமானதொன்றாகும்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 06 October, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ReeCha
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026