என்பிபி அரசின் உண்மை முகம்… திலீபன் சிலை அகற்றல் சொல்லுகிற செய்தி...

Sri Lanka Police Sri Lankan Tamils NPP Government
By Theepachelvan Sep 28, 2026 03:26 AM GMT
Report
Courtesy: தீபச்செல்வன்Gu

தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல் முடிவடைந்த மறுநாள் நல்லூரில் வைக்கப்பட்ட அவரது சிலை இலங்கை காவல்துறையினரால் அகற்றப்பட்டுள்ளது.

ஆட்சி மாறினாலும் எவர் ஜனாதிபதியாக வந்தாலும் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறை மாறாது என்பதை திலீபன் அவர்களின் சிலை அகற்றல் மீண்டும் இந்த உலகிற்கு உணர்த்தியுள்ளது.

அத்துடன் திலீபன் உயிர்நீத்து 39 ஆண்டுகள் கடந்துவிட்ட போதும் கோரிக்கைகள் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதனால்தான் அவரது நினைவைக் கண்டு இன்றும் இலங்கை அரசு அஞ்சுகிறது.

அரசியல் இலாபத்துக்காக மக்களிடையே பிளவுகளை தூண்டும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்! சந்திரசேகர் வெளிப்படை

அரசியல் இலாபத்துக்காக மக்களிடையே பிளவுகளை தூண்டும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்! சந்திரசேகர் வெளிப்படை

நல்லூரில் நடந்த யாகம்

1987 செப்டெம்பர் 15ஆம் திகதி நல்லூர் மண்ணில் திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். உணவும் நீரும் மறுத்து பன்னிரண்டு நாட்கள் மரணத்தை எதிர்கொண்ட அவர், செப்டெம்பர் 26ஆம் திகதி உயிர்நீத்தார்.

அவரது ஐந்தம்சக் கோரிக்கைகள் அன்றைய அரசியல் சூழலிலிருந்து பிறந்தவை. அக் கோரிக்கைகள் எவையும் அன்றைய காலத்தோடு மறைந்து விடவில்லை என்பதை இப்போதைய சூழலும் உணர்த்துகிறது.

என்பிபி அரசின் உண்மை முகம்… திலீபன் சிலை அகற்றல் சொல்லுகிற செய்தி... | Removal Of Thileepan S Statue True Face Of Npp Gov

அரசியல் கைதிகள், இராணுவமயமாக்கல், திட்டமிட்ட குடியேற்றம், தமிழ் மக்களின் அரசியல் உரிமை, வடக்கு–கிழக்கின் மீதான அரச அதிகாரத்தின் கட்டுப்பாடு என அந்தக் கேள்விகள் வேறு வடிவங்களில் இன்னும் தொடர்கின்றன.

இதனால்தான் திலீபனின் நினைவு இலங்கை அரசியலில் கடந்த கால நினைவாக மாத்திரமின்றி நிகழ்காலத்திலும் தமிழர் தேசத்தின் போராட்டக் குரலாக உயிருள்ள நினைவாக இருக்கிறது.

அத்துடன் திலீபனைப் பற்றிய மகத்தான ஈர்ப்பு ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமின்றி சிங்கள மக்கள் மத்தியிலும் உண்டு. சிங்கள சமூகத்திலும் திலீபனின் உண்ணாவிரதத்தை ஒரு அரசியல் போராட்டத்தின் உச்ச வடிவமாகப் பார்த்தவர்களும் இருக்கின்றனர்.

அவருடைய தியாகத்தை மனித உணர்வின் வழியாக அணுகிய சிங்கள எழுத்தாளர்களும் கலைஞர்களும் இருந்துள்ளனர். ஆனால் இன்று தென்னிலங்கையில் சில தரப்புகள் திலீபனின் பெயரையே பயங்கரவாதத்தைப் போற்றும் அடையாளமாக மாற்ற முயற்சிக்கின்றன.

நினைவேந்தலைப் பயங்கரவாத ஆதரவாகச் சித்தரிக்கும் இந்த அரசியல் தரப்புக்களின் வேலை, தமிழ் மக்களின் வரலாற்றை அவர்களிடமிருந்து பிரித்தெடுக்கும் முயற்சியும் அதன் வழியாக தம் குறுகிய அரசியல் நலன்களை அடையும் எத்தனிப்புமாகும்.

சிறிலங்கா அரசின் கோர முகத்தின் வெளிப்பாடு! சிறீதரன் காட்டம்

சிறிலங்கா அரசின் கோர முகத்தின் வெளிப்பாடு! சிறீதரன் காட்டம்

தேர்தலில் தேவைப்பட்ட தலைவர்

ஆனால் ஆட்சியுள்ள அரசு, தெற்கிலுள்ள இந்தச் சூழலைப் பயன்படுத்தி தமிழரின் நினைவேந்தலை ஒடுக்க முற்படுவதை ஏற்கவும் நியாயப்படுத்தவும் முடியாது.

வடக்கு–கிழக்கில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அவர்களுடைய தேசிய உணர்வுகளையும் வரலாற்றையும் தொடும் அரசியல் இன்னொரு முகத்தைக் காட்டுகிறது.

வல்வெட்டித்துறையில் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குச் சிலை வைப்போம் என்றும், இறங்குதுறைக்கு அவரது பெற்றோரின் பெயரை வைப்போம் என்றும் பாடல்கள் பரப்பப்பட்டன.

என்பிபி அரசின் உண்மை முகம்… திலீபன் சிலை அகற்றல் சொல்லுகிற செய்தி... | Removal Of Thileepan S Statue True Face Of Npp Gov

அந்த உணர்வுகளைத் தழுவிய அரசியலுக்கு வடக்கு–கிழக்கில் மக்கள் தமது வாக்குகளை வழங்கினர். ஆனால் ஆட்சியின் அதிகாரம் கைக்கு வந்த பின்னர் அதே மக்களின் நினைவுகளும் அடையாளங்களும் ஒடுக்கப்படுகின்றன.

இதுவே இலங்கை அரசின் வழக்கமான – காலம் காலமான அணுகுமுறையாகும். தேர்தலில் வாக்கைப் பெறுவதற்காக ஏற்றுக்கொள்ளப்படும் தமிழ் மக்களின் நினைவு, ஆட்சியில் அமர்ந்த பின்னர் ஏன் அச்சுறுத்தலாக மாறுகிறது?

மக்களின் உணர்வுகளை அரசியல் பிரசாரத்தில் பயன்படுத்திக்கொண்டு, அதே உணர்வுகளின் வெளிப்பாடான நினைவேந்தலைத் தடுக்கின்ற அரசியல் எந்த வகையான ஜனநாயகம்?

திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்

திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்

நினைவேந்தல் உரிமை

தமிழர்கள் தமது இறந்தவர்களை நினைவுகூர்வது புதிதான கோரிக்கையல்ல. அது ஒரு எமது மக்களின் அடிப்படை மனித உரிமை. நினைவேந்தல் என்பது ஆயுதத்தைப் போற்றுவது என சிங்கள இனவாதிகள் நினைக்கிறார்கள்.

துயரத்தை வெளிப்படுத்துவதற்கும், இறந்தவர்களை நினைவுகூர்வதற்கும், வரலாற்றைத் தலைமுறைகளுக்குக் கடத்துவதற்குமான மனித உரிமை அது.

என்பிபி அரசின் உண்மை முகம்… திலீபன் சிலை அகற்றல் சொல்லுகிற செய்தி... | Removal Of Thileepan S Statue True Face Of Npp Gov

ஐக்கிய நாடுகள் மனித உரிமை நிபுணர்களும் இலங்கையில் தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு விதிக்கப்படும் தடைகள் தொடர்பாக ஏற்கனவே கவலை வெளியிட்டுள்ளனர்.

கருத்துரிமை, அமைதியான ஒன்றுகூடல், கலாசார வாழ்வில் பங்கேற்கும் உரிமை ஆகியவற்றுடன் நினைவேந்தல் உரிமைக்கும் தொடர்பு இருப்பதாக சர்வதேச மனித உரிமை அணுகுமுறைகள் வலியுறுத்துகின்றன.

திலீபன் முன்வைத்த கோரிக்கைகளை இன்று மீண்டும் வாசிக்கும்போது அவை வரலாற்றின் தூசிபடிந்த பக்கங்களில் கிடக்கும் கோரிக்கைகளாகத் தெரியவில்லை. அரசியல் கைதிகள் தொடர்பான கேள்வி இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை.

வடக்கு–கிழக்கில் இராணுவமயமாக்கல் தொடர்பான கேள்விகள் இன்னும் எழுகின்றன. தமிழ் மக்களின் காணி, குடியேற்றம், அரசியல் அதிகாரம், பாதுகாப்பு, அடையாளம் ஆகிய கேள்விகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன.

தியாகதீபம் திலீபனின் உருவச்சிலை அகற்றம் : சீமான் கடும் கண்டனம்

தியாகதீபம் திலீபனின் உருவச்சிலை அகற்றம் : சீமான் கடும் கண்டனம்

சிலை அகற்றல் சொல்லுகிற செய்தி

இன்று நல்லூரில் சிலையை அகற்றுவதால் திலீபன் அவர்களின் பெயரை தமிழ் மக்களின் நினைவிலிருந்து அகற்ற முடியாது. அதற்க மாறாக இன்னும் இன்னும் திலீபனை நினைவுகூரவும் வரும் தலைமுறைகள் தேடவும் வழிவகுக்கும்.

ஒருபோதும் ஒரு மக்களின் மனதுக்குள் பதிந்திருக்கும் வரலாற்றை எந்த அதிகாரத்தாலும் அகற்ற முடியாது. அத்துடன் இதன் வழியாக ஒரு பெரிய உண்மையை தமிழ் மக்களுக்கு சிறிலங்கா அரசு நினைவூட்டியுள்ளது.

என்பிபி அரசின் உண்மை முகம்… திலீபன் சிலை அகற்றல் சொல்லுகிற செய்தி... | Removal Of Thileepan S Statue True Face Of Npp Gov

இன்னும் எமது நினைவுகளுக்குக்கூட அனுமதி தேவைப்படும் நிலத்தில் தான் நாம் வாழ்கிறோம். அகிம்சை வழியில் தன்னுடைய உயிரை நீத்த ஒரு போராளியைக்கூட நினைவுகூர முடியாது என்பது ஈழத் தமிழ் மக்கள் வாழ்கின்ற கொடுமையான சூழலை வெளிப்படையாக உணர்த்துகிறது.

அத்துடன் தமிழர் தேசம் எங்கும் போர் நினைவுச் சின்னங்களை சிறிலங்கா அரச படைகள் உருவாக்கியுள்ளன. அவை தமிழ் மக்களின் மனங்களில் போரின் காயங்களை பெருக்குகின்றன.

தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்திற்கு இவை எப்போதும் தடையாக இடைவெளியாக இருக்கும். அத்துடன் சிலை அகற்றல் போன்ற அடக்குமுறைகளும் அத்தகைய வழிமுறையே. ஆனால் ஒரு விடயத்தை சொல்ல வேண்டும்.

தமிழ் மக்கள் எதை நினைவுகூர்வது, எதை நினைவுகூரக்கூடாது என்பதை சிங்கள மக்கள் தீர்மானிப்பது என்பதும் அதற்கு அரசே உடந்தையாக இருப்பதும் பேரினவாத அணுகுமுறையும் அதை ஊக்குவிப்பதுமாகும்.

தியாக தீபம் திலீபன் சிலை விவகாரத்தில் கேள்வியாகும் ஈழத்தில் வாழும் தமிழ் மக்களின் நிலை! வ.கௌதமன் கண்டனம்

தியாக தீபம் திலீபன் சிலை விவகாரத்தில் கேள்வியாகும் ஈழத்தில் வாழும் தமிழ் மக்களின் நிலை! வ.கௌதமன் கண்டனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 28 September, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026