தியாகதீபம் திலீபனின் உருவச்சிலை அகற்றம் : சீமான் கடும் கண்டனம்

Sri Lanka Police Jaffna Seeman
By Independent Writer Sep 27, 2026 05:46 PM GMT
Report

தியாகதீபம் திலீபனின் நினைவு நாளை ஈழத்தமிழர்கள் உணர்வோடு கடைப்பிடித்த நிலையில், யாழ்ப்பாணம் நல்லூரில் இருந்த அவரது உருவச்சிலையை இலங்கை காவல்துறையினர் அகற்றி எடுத்துச் சென்றிருப்பது பெரும் வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்துகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

தங்களுக்காக போராடி உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் மக்களின் உரிமையில் காவல்துறை தலையிடுவதை எவ்வகையிலும் ஏற்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இனவெறி மனநிலை இன்னமும் மறையவில்லை

உண்ணாமல், நீரும் அருந்தாமல், அகிம்சை வழியில் தன் மக்களுக்காக உயிர் துறந்தவர் திலீபன். அவர் மறைந்து 39 ஆண்டுகள் கடந்த பின்னரும், அவரது உருவச்சிலையைக்கூடச் சகித்துக்கொள்ள முடியாதது ஏன்? உயிரோடு இருந்தபோது அவரது அறப்போராட்டத்துக்குச் செவிசாய்க்காதவர்கள், இன்றும் அவரது நினைவைக் கண்டு அஞ்சுகிறார்களா? இது இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனவெறி மனநிலை இன்னமும் மறையவில்லை என்பதையே காட்டுகிறது.

தியாகதீபம் திலீபனின் உருவச்சிலை அகற்றம் : சீமான் கடும் கண்டனம் | Seeman Condemns The Removal Of Dileban S Statue

ஒரு மக்களின் வரலாற்றை மறைக்கலாம்; அவர்கள் துயரத்தைப் பேசுவதற்கும் தியாகிகளை நினைவுகூர்வதற்கும் தடை விதிக்கலாம் என்று இலங்கை அரசு எண்ணுகிறதா? சிலையை அகற்றுவதால் திலீபனைத் தமிழர்களின் நெஞ்சிலிருந்து அகற்ற முடியாது. இத்தகைய நடவடிக்கை ஈழத்தமிழர்களின் மனக்காயத்தை மேலும் ஆழப்படுத்தவே செய்யும்.

 இலங்கையில் ஆட்சிகள் மாறுகின்றன; ஆட்சியாளர்களின் முகங்களும் வாக்குறுதிகளும் மாறுகின்றன. ஆனால் தமிழர்களின் நினைவுகூரும் உரிமையைக்கூட மதிக்காத அரசின் அணுகுமுறை மாறவில்லை. இந்தச் செயல் அதற்கு இன்னுமொரு சான்றாக நிற்கிறது.

திலீபன் திருவுருவச்சிலை அகற்றம் : தமிழர் தாயகப் பரப்பில் வெடிக்க உள்ள போராட்டங்கள்

திலீபன் திருவுருவச்சிலை அகற்றம் : தமிழர் தாயகப் பரப்பில் வெடிக்க உள்ள போராட்டங்கள்

எத்தனை காலம் நம்பச் சொல்லப் போகிறீர்கள்

உலக நாடுகள் இனியாவது ஈழத்தமிழர்களின் குரலை நேர்மையாகக் கேட்க வேண்டும். தமிழர்களின் அடிப்படை உரிமைகளும் வரலாற்று நினைவுகளும் தொடர்ந்து மறுக்கப்படும் நிலையில், ஒற்றை இலங்கைக்குள் அவர்களுக்கு நீதியான அரசியல் தீர்வு கிடைக்கும் என்று எத்தனை காலம் நம்பச் சொல்லப் போகிறீர்கள்?

தியாகதீபம் திலீபனின் உருவச்சிலை அகற்றம் : சீமான் கடும் கண்டனம் | Seeman Condemns The Removal Of Dileban S Statue

ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு, கண்ணியம், தங்கள் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமை ஆகியவற்றுக்காக உலக நாடுகள் உறுதியான குரல் எழுப்ப வேண்டும்.

தியாகதீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய காவல்துறையின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். அகற்றப்பட்ட சிலையை உரிய இடத்தில் மீண்டும் நிறுவவும், ஈழத்தமிழர்கள் அச்சமின்றி நினைவுகூரும் உரிமையை உறுதி செய்யவும் இலங்கை அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தியாகதீபம் திலீபனின் நினைவு நாளை ஈழத்தமிழர்கள் உணர்வோடு கடைப்பிடித்த நிலையில், யாழ்ப்பாணம் நல்லூரில் இருந்த அவரது உருவச்சிலையை இலங்கை காவல்துறையினர் அகற்றி எடுத்துச் சென்றிருப்பது பெரும் வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்துகிறது.

திலீபனின் உருவச்சிலை அகற்றம் : இலங்கை அரசாங்கங்களின் இனவாதப்போக்கு மீண்டும் அம்பலம்

திலீபனின் உருவச்சிலை அகற்றம் : இலங்கை அரசாங்கங்களின் இனவாதப்போக்கு மீண்டும் அம்பலம்

காவல்துறை தலையிடுவதை  ஏற்க முடியாது

தங்களுக்காக போராடி உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் மக்களின் உரிமையில் காவல்துறை தலையிடுவதை எவ்வகையிலும் ஏற்க முடியாது.

தியாகதீபம் திலீபனின் உருவச்சிலை அகற்றம் : சீமான் கடும் கண்டனம் | Seeman Condemns The Removal Of Dileban S Statue

உண்ணாமல், நீரும் அருந்தாமல், அகிம்சை வழியில் தன் மக்களுக்காக உயிர் துறந்தவர் திலீபன். அவர் மறைந்து 39 ஆண்டுகள் கடந்த பின்னரும், அவரது உருவச்சிலையைக்கூடச் சகித்துக்கொள்ள முடியாதது ஏன்? உயிரோடு இருந்தபோது அவரது அறப்போராட்டத்துக்குச் செவிசாய்க்காதவர்கள், இன்றும் அவரது நினைவைக் கண்டு அஞ்சுகிறார்களா? இது இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனவெறி மனநிலை இன்னமும் மறையவில்லை என்பதையே காட்டுகிறது.

ஒரு மக்களின் வரலாற்றை மறைக்கலாம்; அவர்கள் துயரத்தைப் பேசுவதற்கும் தியாகிகளை நினைவுகூர்வதற்கும் தடை விதிக்கலாம் என்று இலங்கை அரசு எண்ணுகிறதா? சிலையை அகற்றுவதால் திலீபனைத் தமிழர்களின் நெஞ்சிலிருந்து அகற்ற முடியாது. இத்தகைய நடவடிக்கை ஈழத்தமிழர்களின் மனக்காயத்தை மேலும் ஆழப்படுத்தவே செய்யும்.

இலங்கையில் ஆட்சிகள் மாறுகின்றன; ஆட்சியாளர்களின் முகங்களும் வாக்குறுதிகளும் மாறுகின்றன. ஆனால் தமிழர்களின் நினைவுகூரும் உரிமையைக்கூட மதிக்காத அரசின் அணுகுமுறை மாறவில்லை. இந்தச் செயல் அதற்கு இன்னுமொரு சான்றாக நிற்கிறது. உலக நாடுகள் இனியாவது ஈழத்தமிழர்களின் குரலை நேர்மையாகக் கேட்க வேண்டும்.

தமிழர்களின் அடிப்படை உரிமைகளும் வரலாற்று நினைவுகளும் தொடர்ந்து மறுக்கப்படும் நிலையில், ஒற்றை இலங்கைக்குள் அவர்களுக்கு நீதியான அரசியல் தீர்வு கிடைக்கும் என்று எத்தனை காலம் நம்பச் சொல்லப் போகிறீர்கள்?

ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு, கண்ணியம், தங்கள் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமை ஆகியவற்றுக்காக உலக நாடுகள் உறுதியான குரல் எழுப்ப வேண்டும்.

தியாகதீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய காவல்துறையின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். அகற்றப்பட்ட சிலையை உரிய இடத்தில் மீண்டும் நிறுவவும், ஈழத்தமிழர்கள் அச்சமின்றி நினைவுகூரும் உரிமையை உறுதி செய்யவும் இலங்கை அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யாழ். நல்லூரில் திலீபன் நினைவிடத்தில் சிலையின்றி தொடரும் அஞ்சலி!

யாழ். நல்லூரில் திலீபன் நினைவிடத்தில் சிலையின்றி தொடரும் அஞ்சலி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026