திலீபனின் உருவச்சிலை அகற்றம் : இலங்கை அரசாங்கங்களின் இனவாதப்போக்கு மீண்டும் அம்பலம்

Tamils Batticaloa Government Of Sri Lanka Protest
By Independent Writer Sep 27, 2026 02:13 PM GMT
Report

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தியாகதீபம் திலீபனின் உருவச்சிலை காவல்துறையினரால் அடாவடித்தனமாக அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், அதனை அதே இடத்தில் உடனடியாக மீள நிறுவக் கோரியும் நாளை (திங்கட்கிழமை) வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களிலும் கவனயீர்ப்புப் பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் வடக்கு கிழக்கு உப தலைவியும் மட்டக்களப்பு மாவட்டத் தலைவியுமான அமலராஜ் அமலநாயகி அறிவித்துள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், நல்லூர் பகுதியில் தமிழ் மக்களால் புனிதமாகப் பூஜிக்கப்பட்டு, நேற்றைய தினம் அஞ்சலி நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட தியாகதீபம் திலீபன் அவர்களின் உருவச்சிலையை, இன்று அதிகாலை காவல்துறையினர் அடாவடித்தனமாக அகற்றிக் கொண்டு சென்றுள்ளனர்.

அரசின் இனவாதப்போக்கு மீண்டும் நிரூபணம்

தமிழ் மக்களின் அடையாளங்களையும் நினைவுகூரும் உரிமைகளையும் திட்டமிட்டு அழிக்கும் இலங்கை அரசாங்கங்களின் இனவாதப் போக்கையே இது மீண்டும் நிரூபித்துள்ளது.

 தென்னிலங்கை இனவாத சக்திகளைத் திருப்திப்படுத்தி வாக்குகளைப் பெறுவதற்காகவே இவ்வாறான கோர முகத்தை அரசு காட்டுகின்றது. சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பௌத்த விகாரைகள் மற்றும் சிலைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையினர், அகிம்சை வழியில் போராடி உயிர்நீத்த திலீபனின் சிலையை அகற்றியிருப்பது, இந்நாட்டில் இருவேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ளதையே காட்டுகிறது.

இதனைக் கண்டித்து, நாளை திங்கட்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களிலும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளாகிய நாங்கள் கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்தத் தீர்மானித்துள்ளோம்:

அவசரத் தேவையின் நிமித்தம் இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், இதனை ஒரு பொது அழைப்பாக ஏற்று மதகுருமார்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், நாடாளுமன்றப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இதில் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும்.

திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிராக யாழில் போராட்டம்!

திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிராக யாழில் போராட்டம்!

திலீபனின் சிலை அதே இடத்தில் உடனடியாக மீள நிறுவப்பட வேண்டும்

 அகற்றப்பட்ட திலீபனின் சிலை அதே இடத்தில் உடனடியாக மீள நிறுவப்பட வேண்டும். சிலை அகற்றப்பட்டதற்கான பின்னணி குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும். எமது வரலாற்றுச் சின்னங்களையும் நினைவேந்தல் உரிமைகளையும் எவராலும் அழிக்க முடியாது.

திலீபனின் உருவச்சிலை அகற்றம் : இலங்கை அரசாங்கங்களின் இனவாதப்போக்கு மீண்டும் அம்பலம் | Removal Of Thileepan S Statue Issue

இதன்போது வடகிழக்கு மாகாண வலிந்துகாணாமல்ஆக்கபட்டோர் சங்கத்தின் அறிக்கையொன்றும் வாசிக்கப்பட்டது.அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

27 செப்டம்பர் 2026 நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த தியாகதீபம் திலீபன் அவர்களது உருவச்சிலையை காவல்துறையினர் அகற்றியமைக்கு வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது.

தேர்தலில் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக தென்னிலங்கை இனவாத சக்திகளை திருப்திப்படுத்தும் அரசியல் போக்கின் காரணமாக தமிழர்கள் இனமாக, நிலம், வரலாறு மற்றும் உரிமைகள் தொடர்ந்து சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை என்ற அரசியல் கணக்குக்குள் தள்ளப்பட்டு வருகின்றன.

அனுமதியின்றி அமைக்கப்பட்டதாக கூறப்படும் விகாரைகள்

அனுமதியின்றி அமைக்கப்பட்டதாக கூறப்படும் விகாரைகள், புத்தர் சிலைகள் மற்றும் போர் நினைவுச் சின்னங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அகிம்சை வழி போராடி உயிர்நீத்த திலீபனின் சிலை அகற்றப்பட்டிருப்பது சட்டத்தின் சமத்துவமான நடைமுறை குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றன.

திலீபனின் உருவச்சிலை அகற்றம் : இலங்கை அரசாங்கங்களின் இனவாதப்போக்கு மீண்டும் அம்பலம் | Removal Of Thileepan S Statue Issue

ஒரே நாட்டில் இரண்டு சட்டங்கள் இருக்க முடியாது. நினைவுச் சின்னங்கள் தொடர்பில் இன மத பேதமின்றி ஒரே சட்ட அளவுகோல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இங்கு நடப்பதோ இன அழிப்பின் ஒரு பகுதியே ஆகும். அதனாலேயே நாம் சர்வதேச நீதி பொறிமுறையை கோருகின்றோம்.

தமிழ் மக்களிடையே சந்தேகங்கள் 

சிலை அகற்றப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் அரசியல் அல்லது புலனாய்வு தலையீடு இருப்பதாக தமிழ் மக்களிடையே சந்தேகங்கள் எழுந்துள்ளன.

திலீபனின் உருவச்சிலை அகற்றம் : இலங்கை அரசாங்கங்களின் இனவாதப்போக்கு மீண்டும் அம்பலம் | Removal Of Thileepan S Statue Issue

எனவே சிலையை அகற்ற உத்தரவிட்டது யார்? எந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது? அதன் பின்னணி என்ன என்பவற்றை வெளிப்படுத்தும் சுயாதீன விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும். கடந்த பல சதாப்தங்களாக ஆட்சிக்கு வந்த அரசுகள் மாறினாலும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், நினைவேந்தல் உரிமை மற்றும் நீதி கோரிக்கைகள் தொடர்ந்தும் தீர்க்கப்படாமல் உள்ளன.

சமாதானம் மற்றும் நல்லிணக்கம் என்ற பெயரில் தமிழர்கள் மட்டும் தொடர்ந்து அமைதியாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே எமது கோரிக்கைகள்: தியாகி திலீபன் அவர்களது சிலை அகற்றப்பட்ட அதே இடத்தில் உடனடியாக மீள நிறுவப்பட வேண்டும். சிலை அகற்றப்பட்டதற்கான சட்டம் மற்றும் நிர்வாக காரணங்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.

சம்பவம் தொடர்பில் விசாரணையும் பொறுப்புக்கூறலும் உறுதி செய்யப்பட வேண்டும். தமிழ் மக்களின் நினைவேந்தல், அமைதியான ஒன்றுகூடல் மற்றும் கருத்து வெளிப்பாடு உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இது ஒரு சிலையை பற்றிய பிரச்சனை மட்டுமல்ல. ஒரு மக்களின் வரலாறு, நினைவு மற்றும் உரிமையை மதிப்பது தொடர்பான பிரச்சனையாகும்.

எனவே அரசியல் கட்சிகள், பிரதேசம் மற்றும் சமூக வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து தமிழர்களும் ஜனநாயகம் மற்றும் அகிம்சை வழியில் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழ் மக்களின் வரலாறு, நினைவு மற்றும் உரிமைகள் எந்த அரசியல் அழுத்தத்திற்காகவும் பலியிடப்படக்கூடாது.

தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமை

திலீபனின் சிலையை அகற்றிய நடவடிக்கையை நாம் வன்மையாக கண்டிப்பதுடன், அகற்றப்பட்ட அதே இடத்தில் சிலை மீள நிறுவப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றோம்.

திலீபனின் உருவச்சிலை அகற்றம் : இலங்கை அரசாங்கங்களின் இனவாதப்போக்கு மீண்டும் அம்பலம் | Removal Of Thileepan S Statue Issue

இது ஒரு சிலைக்கான போராட்டம் மட்டுமல்ல் தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமை, கண்ணியம் மற்றும் சமத்துவத்திற்கான ஜனநாயக குரலாகும். அரசியல் வேறுபாடுகளையும் பிரதேச வேறுபாடுகளையும் கடந்து அனைத்து தமிழர்களும் அகிம்சை வழியிலும் ஒன்றிணைந்து இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.   

திலீபனின் திருவுருவச் சிலையை பலவந்தமாக அகற்றிய காவல்துறையினர் : வெளியான காணொளி

திலீபனின் திருவுருவச் சிலையை பலவந்தமாக அகற்றிய காவல்துறையினர் : வெளியான காணொளி

திலீபன் திருவுருவச்சிலை அகற்றம் : தமிழர் தாயகப் பரப்பில் வெடிக்க உள்ள போராட்டங்கள்

திலீபன் திருவுருவச்சிலை அகற்றம் : தமிழர் தாயகப் பரப்பில் வெடிக்க உள்ள போராட்டங்கள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025