வேகமாக பரவி வரும் புதிய வகை கொரோனா: சுகாதார அமைப்பின் எச்சரிக்கை
பிஜே.2.1 எனப்படும் புதிய வகை கொவிட்-19 வைரஸ், 2026-ஆம் ஆண்டு மே மாதம் கனடாவில் கண்டறியப்பட்ட நிலையில், அதிவேகமாக தற்போது உலகம் முழுவதும் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
எனினும், இதுவரை பரவி வந்த கொரோனா வைரஸ்களுடன் ஒப்பிட்டால், அது மக்களிடயே மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவது உறுதி செய்யப்படவில்லை என்றே கூறப்படுகிறது. இருப்பினும் மக்கள் அவதானத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதன் முதல் அச்சமே, இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களிலேயே இந்த வைரஸ் வேகமாகக் பரவுகிறது, கண்டறியப்பட்ட சில மாதங்களில் பல கண்டங்களுக்கும் பரவியிருக்கிறது.
வேகமாக பரவல்
இந்த வகை வைரஸ், வட அமெரிக்காவின் பல பகுதிகளிலும், சிங்கப்பூர், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இஸ்ரேல், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஸ்பெயினில், பல்வேறு பகுதிகளில் இந்த வைரஸ் தொடர்ந்து உள்ளூர் மக்களிடையே பரவி வருவதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் இந்த வகை வைரஸ், மிக வேகமாகப் பரவி வருவதாகவும் தெரிய வந்துள்ளது. கொவிட்-19 இன் புதிய வகை வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி வருவதால், இதன் அறிகுறிகள், பரவும் விதம், தீவிரத்தன்மை, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பற்றி விரிவாக ஆலோசனை நடத்தப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பு, பிஜே.2.1 எனும் இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவும் அபாயம் அதிகரித்து வருவதாகவும், மக்கள் மேற்கொள்ளம் சர்வதேசப் பயணங்கள் இதற்குக் காரணமாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்காப்பு
மேலும், வழக்கமான காய்ச்சல், தொண்டை வலி, இருமல், சளி, மூக்கடைப்பு, தலைசுற்றல், தலைவலி, தசைகளில் வலி போன்றவையே இதன் அறிகுறிகள் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், இது கவலையை ஏற்படுத்தும் ஒரு வைரஸ் ஆக இனங்காணப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக் கொள்ள எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் இதற்கும் பொருந்தும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |