ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் 23 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; இந்தியர்கள் உட்பட 14 பேர் பலி
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் புஜைரா நகரில் உள்ள ஷேக் கலீபா பின் சைத் பகுதியில் நேற்று (12) இரவு ஏற்பட்ட கோர லொறி விபத்தில் இந்தியர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்குள்ளான லொறியை சாரதியால் கட்டுப்படுத்த முடியாததால், அது மேலும் பல வாகனங்கள் மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கோர விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
தீப் பரவல்
விபத்தினைத் தொடர்ந்து லொறியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், அது ஏனைய வாகனங்களுக்கும் பரவியதால் உயிர்ச்சேதங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் 23 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக நெரிசல் காரணமாக மெதுவாக ஊர்ந்து சென்ற வாகனத் தொடரணி மீது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி மோதி கவிழ்ந்ததன் காரணமாகவே இந்தப் பேரழிவு நேர்ந்துள்ளதாகப் புஜைரா காவல்துறையினர் அறிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |