அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி - ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதி!
அமெரிக்காவில் பதிவான துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தலைநகர் வோஷிங்டன் டிசியின் மத்திய பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
சந்தேகிக்கப்படும் நபர்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
லோகன் சர்க்கிள் பகுதியில் உள்ள 15 ஆவது வீதி மற்றும் P வீதி சந்திப்பில் இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் அருகிலுள்ள கட்டடமொன்றுக்குள் புகுந்து தன்னைத் தானே முடக்கிக்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் சாம்பல் நிற சட்டை அணிந்த ஆண் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக தகவல்கள்
சம்பவ இடத்தில் அமெரிக்க காவல்துறையினர், FBI மற்றும் இரகசிய சேவைப் பிரிவினர் இணைந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், அருகிலுள்ள பாடசாலைகள் முடக்கப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் பாதுகாப்பான கட்டடங்களுக்குள் சென்று ஜன்னல்களிலிருந்து விலகி இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் காயமடைந்தவர்களின் நிலைமை தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |