புலம்பெயர் இலங்கையர்களின் அடுத்த தலைமுறையினருக்கு இலவச இரட்டைப் பிரஜாவுரிமை
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை வம்சாவளியினரின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறையினரைத் தாய்நாட்டுடன் இணைக்கும் நோக்கில், 'உலகளாவிய இலங்கை மரபுரிமைப் பிரஜை' என்ற புதிய திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நாடாளுமன்றத்தில் முன்வைத்தபோதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, இரட்டைப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிப்பவர்களின் வாழ்க்கைத் துணைவர் மற்றும் பிள்ளைகளுக்கும், வெளிநாடுகளில் வசிக்கும் மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளுக்கும் எவ்வித கட்டணமுமின்றி இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இலங்கை வம்சாவளியினர்
வெளிநாடுகளில் பிறந்து வளர்ந்த இலங்கை வம்சாவளியினர் தமது தாய்நாட்டுடனான தொடர்பைப் பேணுவதை ஊக்குவிப்பதுடன், பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் நிதிச் சுமையைக் குறைப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |