சர்வதேச போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு 100 மில்லியன் ஊக்கத்தொகை
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் இலங்கை வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், வரலாற்றுச் சிறப்புமிக்க பாராட்டுப் பரிசுத் தொகைகளை வழங்குவதற்கு 2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்திய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, சர்வதேசப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு வழங்கப்படவுள்ள பணப் பரிசு விபரங்களை வெளியிட்டார்.
இதன்படி பரிசத்தொகைகள் பின்வருமாறு அமையும்,
8,500 மில்லியன் ரூபா
ஒலிம்பிக் போட்டிகள்: 100 மில்லியன் ரூபாய் (10 கோடி)
- உலக மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப்: 100 மில்லியன் ரூபாய் (10 கோடி)
- பொதுநலவாய (Commonwealth) விளையாட்டுப் போட்டிகள்: 75 மில்லியன் ரூபாய் (7.5 கோடி)
- ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: 50 மில்லியன் ரூபாய் (5 கோடி)
- தெற்காசிய (SAARC) விளையாட்டுப் போட்டிகள்: 15 மில்லியன் ரூபாய் (1.5 கோடி)
இதேவேளை, வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வெல்லும் வீரர்களுக்கும் இதற்கேற்ற விகிதத்தில் பணப் பரிசுகள் வழங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறையின் ஒட்டுமொத்த அபிவிருத்திக்காக 2027ஆம் ஆண்டில் 8,500 மில்லியன் ரூபா (850 கோடி ரூபா) நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
பெண்களைத் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்களுக்கு ரூ.1,250 கோடி நிதியுதவித் திட்டம் - ஜனாதிபதி அறிவிப்பு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |