பெண்களைத் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்களுக்கு ரூ.1,250 கோடி நிதியுதவித் திட்டம் - ஜனாதிபதி அறிவிப்பு
பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில், சலுகை அடிப்படையிலான கடன் வசதிகளை வழங்குவதற்காக 12.5 பில்லியன் ரூபாய் (1,250 கோடி ரூபாய்) பெறுமதியான நிதியுதவித் திட்டமொன்றை ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இதற்கமைய, சமுர்த்தி வங்கிகள் ஊடாக இக்குடும்பங்களுக்கு வருடாந்தம் 3 சதவீத சலுகை வட்டி வீதத்தில் கடன்கள் வழங்கப்படவுள்ளன.
இதன் கீழ், தகுதியுடைய பயனாளிகளுக்கு அதிகபட்சமாக 1 மில்லியன் ரூபாய் (10 இலட்சம் ரூபாய்) வரையான கடன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் தொழில்முனைவோர்
குறித்த கடன் வசதிகள் தனிநபர் அடிப்படையில் அல்லாது, குழுக் கடன் (Group Loan) திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளன.
பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துதல், சுயதொழில் முயற்சிகளை ஊக்குவித்தல் மற்றும் அவர்களின் பொருளாதார சுதந்திரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சமுர்த்தி வங்கிகள் மூலம் கிராமப்புறங்களில் தொழில்முனைவோரை ஆதரிப்பதற்காக ரூ. 5,000 மில்லியன் கடன் திட்டத்தை அரசு முன்மொழிந்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், கடன்கள் 4% என்ற சலுகை வட்டி விகிதத்தில் வழங்கப்படும், மீதமுள்ள வட்டிச் செலவை கருவூலம் ஏற்கும்.
தகுதிபெற, தொழில்முனைவோர் அஸ்வேசுமா நலத்திட்டத்தின் குறைந்தது ஐந்து பயனாளிகளைப் பணியமர்த்த வேண்டும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |