இரட்டை நிலைப்பாடுகளில் எதிர்கட்சி! விரைவில் நாடாளுமன்றில் நடக்கவிருக்கும் மாற்றம்
தற்போதைய எதிர்கட்சியின் நிலைப்பாடுகளில் உள்ள மாற்றங்களை அரசாங்கம் என்ற ரீதியில் தாங்கள் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், விரைவில் எதிர்கட்சியில் உள்ள மாற்றத்தை நாடாளுமன்றம் அறிந்துக்கொள்ளும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவித்த போது மேற்கண்ட விடயத்தை வெளிப்படுத்திய அவர், எதிர்கட்சி தலைவருக்கு சவாலொன்றையும் விடுத்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
ஹர்ஷ டி சில்வாவின் உரை
இந்த வருடம் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது எதிர்கட்சியில் இடம்பெறவுள்ள சில மாற்றங்கள் மற்றும் நிலைப்பாடுகளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

வரவு செலவு திட்ட வரலாற்றில் மற்றுமொரு மாற்றம் இடம்பெற்றுள்ளது. அதை ஒரு அரசாங்கமாக நினைத்து நாங்கள் சந்தோசப்படுகின்றோம்.
குறிப்பாக ஹர்ஷ டி சில்வாவின் உரையை கேட்க நாங்கள் ஆர்வமாக இருக்கின்றோம். அப்போது ஒரு விடயம் புரியும். ஐக்கிய மக்கள் சக்தியின் கோட்பாடுகளில் மாற்றம் உள்ளதா இல்லையா என்பது குறித்து எமக்கு அறிய கிடைக்கும்.
ஏனென்றால் இன்றைய நாடாளுமன்ற உரையில் எதிர்கட்சி தலைவர் பொருளாதார விடயங்கள், ஐ.எம்.எப் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக வைத்து கருத்துக்களை முன்வைத்தார்.
அதே நிலைப்பாட்டில்தான் ஏனைய உறுப்பினர்களும் உள்ளனரா என்பதை அறிந்துக்கொள்ளும் ஆர்வம் எமக்கு இருக்கிறது.
அதை நாங்கள் பார்க்க போகின்றோம். எதிர்கட்சி தலைவர் கூறிய பல்வேறு கருத்துக்களை மாற்றவேண்டும். இவருக்கு மாத்திரம் எங்கு இருந்து இவ்வாறான புதிய தகவல்கள் எல்லாம் கிடைக்கின்றது என தெரியவில்லை” என கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |