அனுமதியின்றி வெளிநாடு சென்ற இரு பாடசாலை அதிபர்கள் அதிரடியாக பதவிநீக்கம்
அனுமியின்றி தனிப்பட்ட காரணத்திற்காக வெளிநாடு சென்ற இரண்டு மகளிர் கல்லூரி அதிபர்கள் அவர்களுடைய பதவியில் இருந்து நீக்குவதற்கு கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இரத்தினபுரி பேர்குசன் மகளிர் கல்லூரியின் அதிபர் மெர்சி கலகம மற்றும் பண்டாரவளை மத்திய கல்லூரியின் அதிபர் விஷாகா ராஜபக்ச ஆகியோரையே இவ்வாறு பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எக்கப்பட்டுள்ளது.
குறித்த இரு அதிபர்களும் கடந்த 14ஆம் திகதி தனியார் நிறுவனமொன்றின் அனுசரணையில் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சு விசாரணை
இந்தப் பயணத்திற்கான உரிய அனுமதி பெறப்படாத நிலையில், தாபன விதிக்கோவையின் ஏற்பாடுகளுக்கு அமைய அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளைத் தொடர்ந்து, குறித்த இரு அதிபர்கள் தொடர்பிலும் அமைச்சு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தரத்தைச் சேர்ந்த அதிபர்களாவர்.
இவர்கள் இருவர் இதற்கு முன்னர் அதிபராகப் பணியாற்றிய பாடசாலை காலத்திலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |