காலியில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை: நண்பர் தலைமறைவு
காலியில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் காலி – ஹிக்கடுவைப் பகுதியில் நேற்று (19-11-2026) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அதே பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
நீண்ட கால முரண்பாடு
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உயிரிழந்த இளைஞனுக்கும் அவரது நண்பரான 29 வயதுடைய இளைஞர் ஒருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக நீண்ட காலமாக முரண்பாடு நிலவி வந்துள்ளது.

இந்தநிலையில், நேற்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியுள்ளது.
இதையடுத்து, 29 வயதுடைய இளைஞர் தன்னிடமிருந்த கூரிய கத்தியால் மற்றைய இளைஞரை சரமாரியாகக் குத்தியுள்ளார்.
தேடுதல் நடவடிக்கை
இதில் தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்த இளைஞர், உயிருக்கு ஆபத்தான நிலையில் உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவத்தைச் செய்த பின்னர் சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பியோடி தலைமறைவாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர், உயிரிழந்தவரின் சடலத்தைப் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் தப்பியோடிய சந்தேகநபரைக் கைது செய்வதற்கான தீவிர தேடுதல் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |