யாழ்ப்பாணம் - சென்னை இடையிலான விமான சேவைகள் இரத்து
யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான காற்று மாசு மற்றும் தெளிவற்ற வானிலை காரணமாக, இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் - சென்னை இடையிலான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
காற்று மாசுபாடு அதிகரித்தமையால், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையப் பகுதியில் விமானங்கள் தரையிறங்குவதற்கும் புறப்படுவதற்கும் போதிய பார்வைத் தெளிவு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாகவே சென்னை - யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று நடைபெறவில்லை.
யாழ்ப்பாணத்தில் காற்றின் தரச் சுட்டெண்
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் காற்றின் தரச் சுட்டெண் 200 என்ற எல்லையைத் கடந்து மிகவும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள அக்வான் புயலின் தாக்கத்தால் காற்றின் திசையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் எல்லை கடந்து வீசும் மாசடைந்த காற்று ஆகியவற்றாலேயே, யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் காற்றின் தரம் இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |