கடலில் மிதந்து வந்த சடலம்:உறுதிப்படுத்தப்படாத அடையாளம்:விசாரணைகள் ஆரம்பம்
Sri Lanka Police
Colombo
Death
By Sindu
கொழும்பு துறைமுக காவல் பிரிவு எல்லைக்குட்பட்ட, போட் ஹவுஸிற்கு அருகே கடலில் மிதந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று (18) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கொழும்பு துறைமுக காவல்பிரிவினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
உயரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
விசாரணைகள் ஆரம்பம்
அந்த நபருக்கு சுமார் 45 வயது இருக்கலாம் என நம்பப்படுகிறது. சடலம் கண்டெடுக்கப்பட்ட நேரத்தில் அவர் பழுப்பு நிற கால்சட்டையும் கருப்பு நிற டி-ஷர்ட்டும் அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த உயிரிழப்பு கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணத்தினாலா என்பதை கண்டுபிடிக்க கொழும்பு துறைமுக காவல் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்