விமல் வீரவன்சவின் மனைவி சஷிக்கு இரண்டு வருட சிறை:உறுதிப்படுத்திய உயர் நீதிமன்றம்
விமல் வீரவங்சவின் மனைவியான சஷி வீரவங்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று (18) உறுதிப்படுத்தியுள்ளது.
முறையற்ற வெளிநாட்டுக் கடவுச்சீட்டு ஒன்றைச் தம்வசம் வைத்திருந்தமையினால் குற்றவாளியாக சஷி வீரவங்ச பெயரிடப்பட்டிருந்தார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட குறித்த சிறைத்தண்டனைக்கு எதிராக அவர் மேன்முறையீடு செய்திருந்தார்.
மேன்முறையீடு நிராகரிப்பு
இந்நிலையில் சமர்ப்பித்த மேன்முறையீட்டைப் பரிசீலித்த பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், அந்த மேன்முறையீட்டை நிராகரித்து இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

அதன்படி, திறந்த நீதிமன்றத்தில் முன்னிலையான சஷி வீரவங்சவை உடனடியாக விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட பிரதம நீதியரசர் தலைமையிலான நீதியரசர்கள் குழாம், குறித்த தண்டனையைச் செயற்படுத்துவதற்காக அவரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் பணித்தது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |