உகண்டாவில் பதுக்கப்பட்ட பணத்தை கொண்டுவாருங்கள்! சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பில் கடும் வாக்குவாதம்
நாட்டின் தேசிய விமான சேவையான சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தொடர் நட்டம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து நாடாளுமன்றில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி கேள்வி எழுப்பியபோது முன்வைத்த கருத்துக்களால் இவ்வாறு வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் திட்டங்கள் குறித்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சரா ஜனித ருவன் கொடித்துவக்கு இன்று நாடாளுமன்டறில் கருத்து வெளியிடும் போதே சமிந்த விஜயசிறி மேற்படி தனது கருத்துக்களை முன்வைத்தார்.
உகண்டா மற்றும் சீஷெல்ஸ்
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட சமிந்த சமிந்த விஜயசிறி,

“ஆளும் தரப்பினர் எதிர்க்கட்சியில் இருந்தபோது கூறியதைப் போல, உகண்டா மற்றும் சீஷெல்ஸ் நாடுகளில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட பணத்தைக் கொண்டுவந்தாவது இந்த விமான சேவையைக் கட்டியெழுப்புமாறு சவால் விடுக்கின்றேன்.
கடந்த காலங்களில் ஆளும் தரப்பினர் எதிர்க்கட்சியில் இருந்தபோது சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஊழல் மற்றும் நட்டங்கள் குறித்துப் பலவாறு விமர்சித்திருந்தனர்.
அன்று உகண்டா மற்றும் சீஷெல்ஸ் நாடுகளில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீட்டு நாட்டைக் கட்டியெழுப்பப் போவதாகவும் கூறினீர்கள்.
இப்போது அந்தப் பணத்தைக் கொண்டுவந்தாவது வரி செலுத்தும் மக்களுக்குச் சுமையில்லாமல் இந்த விமான சேவையைக் கட்டியெழுப்புங்கள்.
மேலும், நிறுவனத்தைத் தனியார்மயமாக்குவதற்கு அல்லது குத்தகைக்கு விடுவதற்கு முன்பு எதிர்ப்புத் தெரிவித்த ஆளும் தரப்பு, தற்போது தீர்க்கமான முடிவெடுக்கத் தயங்குகிறது.” என்றார்.
இன்போது சபாநாயகர், “விடயத்துக்கு அப்பாற்பட்ட கருத்துக்களை முன்வைக்க வேண்டாம்” என சுட்டிக்காட்னார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |