ஞானசார தேரரின் 4 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம்
இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையிலான கருத்துக்களைத் தெரிவித்ததற்காக, பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த நான்காண்டு கடுங்காவல் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்க கோரி ஞானசார தேரர் தாக்கல் செய்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தபோது, நீதியரசர்கள் அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இஸ்லாமிய மதத்தை அவமதித்ததற்காகவும், பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையேயான நல்லிணக்கத்திற்குப் பாதகமான வகையில் செயல்பட்டதற்காகவும், ஞானசார தேரர் மீது இலங்கை தண்டனைச் சட்டத்தின் 291-வது பிரிவின் கீழ் சட்டமா அதிபர் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்திருந்தார்.
கடுங்காவல் தண்டனை
குரகல கோயில் தொடர்பாக 2016 மார்ச் 30 அன்று கிருலபனையில் நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது அவர் தெரிவித்த கருத்துக்களுக்காக இந்தக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி எனக் கண்டறிந்த பின்னர், கொழும்பு மேல் நீதிமன்றம் ஞானசார தேரருக்கு 2024-ஆம் ஆண்டில் நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது.
பின்னர் ஞானசார தேரர் அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |