நாளை போராட்டத்தில் குதிக்கவுள்ள அரச நிறைவேற்று அதிகாரிகள்!
Government Employee
Sri Lanka
Protest
By Shalini Balachandran
அரச நிறைவேற்று அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
அரச நிறைவேற்று அதிகாரிகள் கூட்டுக் குழு இதனைத் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் குறித்த போராட்டம் நாளை (20-11-2026) முன்னெடுக்கப்படவுள்ளது.
கொடுப்பனவு அதிகரிப்புகள்
2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான ஏற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தநிலையில் பல்வேறு நிறைவேற்றுச் சேவைப் பிரிவுகளைச் சேர்ந்த 20 தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதீட்டுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள கொடுப்பனவு அதிகரிப்புகள், தமது சம்பளம் மற்றும் சலுகைகள் தொடர்பான கோரிக்கைகளுக்குத் தீர்வளிக்கவில்லை என தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |