ஈழத்துக் கவிஞர் சேரனின் மறைவிற்கு புத்தசாசன அமைச்சர் சபையில் இரங்கல்
கனடாவில் காலமான புகழ்பெற்ற ஈழத்துக் கவிஞரும் பல்கலைக்கழகப் பேராசிரியருமான ஆர். சேரனின் மறைவுக்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
இன்றைய (19) நாடாளுமன்ற அமர்வின் போது இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போது தனது உரையின் இறுதியில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
மகாகவி உருத்திரமூர்த்தியின் புதல்வரான கவிஞர் ஆர். சேரனின் இலக்கியப் பங்களிப்புகளையும் கல்விப் பணிகளையும் நினைவுகூர்ந்து நாடாளுமன்றத்தின் சார்பிலும், ஒட்டுமொத்த நாட்டின் சார்பிலும் இரங்கல் வெளியிட்டார்.
நாட்டை விட்டு வெளியேறினார்
1987 ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய நல்லிணக்கமின்மை காரணமாக கவிஞர் ஆர். சேரன் நாட்டை விட்டு வெளியேற நேரிட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

1970 அல்லது 1980களிலேயே நாட்டில் தூரநோக்குடனான நிலையான நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட்டிருந்தால், இத்தகைய சிறந்த அறிஞர்களும் படைப்பாளிகளும் எமது நாட்டிலேயே இருந்திருப்பார்கள் எனவும், நாட்டுக்கு ஏற்பட்ட இந்த இழப்பு ஈடுசெய்ய முடியாதது எனவும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |