யாழ். ஊர்காவற்துறை நீதிமன்றில் சாட்சியமளிக்கச் சென்றவர் மீது வாள்வெட்டு தாக்குதல்!
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு சாட்சியம் அளிக்கச் சென்றவர் மீது சரமாரியான வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அராலி சந்திக்கு அருகில் வைத்து இன்றைய தினம் (19) இந்த வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் தாக்குதலில் படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஊர்காவற்துறை நீதிமன்றம்
இது குறித்து மேலும் தெரியவருகையில், ஊர்காவற்துறை நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணை ஒன்றில் சாட்சியமளிக்க, இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இருந்து, ஊர்காவற்துறை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தனர்.

இதன்போது, அராலி சந்திக்கு அண்மையில் மூவர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
தீவக சிவில் அமைப்பின் உப தலைவர் கருணாகரன் குணாளன் என்பவர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |