முகக்கவசம் அணியுங்கள்...! யாழ் மக்களுக்கு வெளியான அவசர அறிவிப்பு
காற்றின் தரம் மிக மோசமான நிலைக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், யாழ் உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசங்களை அணிந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் காற்றின் தரம் மிக மோசமான நிலைக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், அங்கு காற்றின் தரச் சுட்டெண் 200-ஐ கடந்து பதிவாகியுள்ளதாகவும் மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) சுற்றுச்சூழல் பிரிவுத் தலைவர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.
மருத்துவ ஆலோசனை
வங்காள விரிகுடாவில் நிலவும் தாழமுக்கப் பகுதியினால் காற்றின் திசையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக, வெளிநாடுகளிலிருந்து மாசுபட்ட காற்று நாட்டிற்குள் ஊடுருவுவதே இதற்குக் காரணமாகும்.

இதற்கமைய, நாட்டின் பெரும்பாலான நகரங்களில் இலங்கையின் காற்றுத் தரச் சுட்டெண்ணின்படி (SL AQI), காற்று மாசுபாட்டின் அளவு 100 முதல் 150 வரை பதிவாகியுள்ளது. அத்துடன் யாழ்ப்பாணத்தின் காற்றின் தரக் குறியீடு 200 என்ற எல்லையைத் தாண்டியுள்ளது.
இந்த நிலைமை இன்னும் ஓரிரு நாட்களுக்கு நீடிக்கக்கூடும் என்பதால், உணர்திறன் மிக்கவர்கள் மற்றும் சுவாசப்பிரச்சினை உள்ளவர்களுக்கு ஆரோக்கியப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும், பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசங்களை அணிந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |