கடையில் ஏற்பட்ட பாரிய தீப் பரவல் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு
புதிய இணைப்பு
கடுவலையில் உள்ள மின்சாதனப் பொருட்கள் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் தாய், தந்தை மற்றும் அவர்களது இரண்டு, ஆறு வயதுடைய இரண்டு குழந்தைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இரண்டு மாடிக் கட்டிடத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. தரைத்தளத்தில் மின்சாதனப் பொருட்கள் கடையும், மேல் மாடியில் அந்தக் குடும்பமும் வசித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதல் இணைப்பு

கடுவலை நகரிலுள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காகக் கோட்டை தீயணைப்புப் பிரிவின் 03 தீயணைப்பு வாகனங்கள் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று (19) காலை இந்தத் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காரணம் வெளிவரவில்லை
தீப் பரவலுக்கான காரணமும் சேத விபரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |