பிரான்ஸில் யாழ்ப்பாண தமிழ் பெண் ஒருவர் கொலை - கொலையாளியின் மனைவி செய்த செயல்
பிரான்ஸில் யாழ்ப்பாண தமிழ் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழர்கள் செறிந்து வாழும் பாரிஸின் புறநகர் பகுதியான லா-கூர்னவ் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது
இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறிய நிலையில், பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
பெண்ணை தனது கணவன் கொலை
சம்பவத்தில் 51 வயதான யாழ்ப்பாண பெண், சந்தேக நபர் தள்ளிவிட்டமையினால் இரும்பு கம்பி ஒன்றில் வீழ்ந்தமையினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 9 ஆம் திகதி குறித்த பெண் காணாமல் போயிருந்த நிலையில், சனிக்கிழமை வாகனம் திருத்தும் நிலையம் ஒன்றின் காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணை தனது கணவன் கொலை செய்துள்ளதாக, சந்தேக நபரின் மனைவியால் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் , சந்தேக நபர் உட்பட மூன்று பேரை கைது செய்துள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |