அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை!
அணைகள் உள்ளிட்ட ஈரானின் பொதுமக்கள் பயன்பாட்டு உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அமெரிக்கா அவ்வாறான தாக்குதல்களை நடத்த முற்பட்டால் அதற்குச் சமமான பதிலடி சந்தேகத்திற்கு இடமின்றி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படை
இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் பேச்சாளர் மொஹெப்பி இதனை தெரிவித்துள்ளார்.
ஈரானில் அமைக்கப்பட்டுள்ள அணைகளுக்கும் நிலத்தடி ஏவுகணைத் தளங்கள் எனச் சந்தேகிக்கப்படும் இடங்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக அண்மையில் செய்தி ஒன்று வெளியாகி சர்ச்சைக்குள்ளாகி இருந்தது.

அத்தோடு இராணுவத் தேவைகளுக்கான நீர் மற்றும் மின்சார விநியோகத்துடனும் இவை தொடர்புபட்டுள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பிண்ணனியில் ஈரானிய அணைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில் அவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் அதே அளவிலான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |