நாமல் ராஜபக்சவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
புதிய இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எயார்பஸ் வழக்கு தொடர்பாக இன்று அவர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டார்.
இதன்படி இடம்பெற்ற விசாரணைக்கு அமைய டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.
முதலாம் இணைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான இலஞ்ச வழக்கு இன்று (19) பிற்பகல் கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றின் முன்னிலையில் அழைக்கப்படவுள்ளது.
குறித்த வழக்கில் முன்னிலைப்படுத்துவதற்காக நாமல் ராஜபக்ச இவ்வாறு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
தடை உத்தரவு
இந்நிலையில் ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பாக நாமல் ராஜபக்ச நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

அத்துடன் கிரிஷ் வழக்கு தொடர்பில் நாமல் ராஜபக்சவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவை தற்காலிகமாக இடைநிறுத்தி, கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |