டுபாயில் பதுங்கியுள்ள இலங்கையின் 200 பாதாள உலகப் புள்ளிகள்: நாடு கடத்த UAE அதிரடி உத்தரவு!
பல்வேறு பாதாள உலக குற்றஙகளுடன் தொடர்புபட்டு டுபாயில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த சந்தேகபர்களை கைது செய்ய அந்நாட்டு காவல்துறை விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
டுபாயின் பொதுப் பாதுகாப்புப் பிரதித் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் தாஹி கல்ஃபானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை காவல்துறையை அரசியல்மயமாக்கலிலிருந்து விடுவிக்கும் சர்வதேச அமைப்பின் தலைவர் அஜித் தர்மபாலவால் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
விபரங்கள் அடங்கிய பட்டியல்
இலங்கையில் பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களைப் புரிந்துவிட்டு, டுபாய்க்குத் தப்பிச் சென்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வரும் சுமார் 200 பாதாள உலகக் குழுவினரின் பட்டியல் டுபாய் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

டுபாயில் நடைபெற்று வரும் உலகப் காவல்துறை மாநாட்டில் பங்கேற்றுள்ள இலங்கைப் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நேரடித் தலையீட்டின் ஊடாக டுபாயின் பொதுப் பாதுகாப்புப் பிரதித் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் தாஹி கல்ஃபான் சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, இலங்கையிலிருந்து தப்பிச் சென்று டுபாயில் சொகுசு வாகனங்கள் மற்றும் தனிப்பட்ட மெய்ப்பாதுகாவலர்களுடன் பதுங்கியுள்ள சுமார் 200 முக்கியக் குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியல் கையளிக்கப்பட்டுள்ளது.

இதனைப் பெற்றுக்கொண்ட ஜெனரல் தாஹி கல்ஃபான், இலங்கைப் காவல்துறை மா அதிபர் முன்னிலையிலேயே குறித்த நபர்களை உடனடியாகக் கைது செய்து இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான அதிரடி உத்தரவுகளைத் தொலைபேசி மூலம் சம்பந்தப்பட்ட பாதுகாப்புப் பிரிவினருக்குப் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |