சீனாவில் டிரம்ப் - ஜி ஜின்பிங்கை சந்திக்க அணு ஆயுத சூட்கேசுடன் வந்த புடின்…!
சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறும் APEC உச்சி மாநாடு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோருடனான முத்தரப்பு சந்திப்பிற்காக சென்றுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன், ரஷ்யாவின் 'அணு ஆயுத சூட்கேஸ்' கொண்டு செல்லப்பட்ட காணொளி காட்சிகள் வெளியாகி உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 'Russia-1' தொலைக்காட்சி அலைவரிசை இந்த அரிய காட்சிகளை ஒளிபரப்பியுள்ளது.
மாநாட்டு வளாகத்தில் புடினுக்கு பின்னால் ரஷ்ய கடற்படை அதிகாரி ஒருவர் கருப்பு நிற சூட்கேஸ் ஒன்றை சுமந்து செல்லும் காட்சி 'ரஷ்யா-1' தொலைக்காட்சியில் வெளியானது.
அரிய காட்சி
அப்போது அந்த அலைவரிசை செய்தியாளர் யெவ்ஜெனி போபோவ் அந்த அதிகாரியிடம் நேரடியாக கேள்வி எழுப்பினார்:
செய்தியாளர்: "வணக்கம், இதுதான் அணு ஆயுதத் தாக்குதலுக்கு உத்தரவிடக்கூடிய அந்த அணு ஆயுத சூட்கேஸா?"
கடற்படை அதிகாரி: "ஆம்"
செய்தியாளர்: "அந்தக் குறிப்பிட்ட பெட்டிதானா?"
கடற்படை அதிகாரி: "அதே பெட்டிதான்" எனப் பதிலளித்துள்ளார்.
அணு ஆயுதக் கட்டுப்பாடு குறித்து டொனால்ட் ட்ரம்ப் பேச விரும்பும் நிலையில், புடினுடன் இந்த பெட்டி கமராவில் படம்பிடிக்கப்பட்டிருப்பது சர்வதேச அரசியல் வட்டாரத்தில் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |