கிளிநொச்சியில் தொடருந்து பாதையில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு ஆணிகள் திருட்டு!
Sri Lanka Police
Kilinochchi
Railways
By Shalini Balachandran
கிளிநொச்சியில் தொடருந்து பாதையில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு ஆணிகள் திருடப்பட்டுள்ளன.
ஆனையிறவு பகுதியில் அமைந்துள்ள தொடருந்து பாதையில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு ஆணிகள் இவ்வாறு இனந்தெரியாத நபர்களினால் களவாடப்பட்டுள்ளன.
தொடருந்து தண்டவாளங்களைப் பாதுகாப்பாகப் பொருத்தி வைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் குறித்த இரும்பு ஆணிகள் கழற்றி எடுக்கப்பட்டுத் திருடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
தொடருந்து போக்குவரத்தின் பாதுகாப்பிற்குப் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்திருட்டுச் சம்பவம் தொடர்பாகப் புகையிரத திணைக்களத்தின் பாதுகாப்புப் பிரிவினரும் கிளிநொச்சி காவல்துறையினரும் இணைந்து மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |