யாழ்ப்பாணத்தை அடுத்து மட்டக்களப்புக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் வளி மாசடைந்துள்ளதால் பொது மக்களின் இயல்பு வாழ்வில் சற்று தழம்பல நிலை ஏற்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக வளி மாசடைந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்வில் சற்று தளம்பல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இதனால் சுவாச நோய்கள் ஏற்பட உள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
அறிவுறுத்தல்
எனவே பொதுமக்கள் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் மிகுந்த அவதானத்துடன் போக்குவரத்து பயணங்களை மேற்கொள்ளுமாறு முகக் கவசங்கள் அணிந்து கொள்ளுமாறும் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் மாணவர்கள், வயோதிபர்கள் சிறுவர்கள் சுவாசம் சம்பந்தப்பட்ட நோயாளிகள் நன்னீர் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு சுகாதாரத் தரப்பினரை ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
இன்று (20) காலை மட்டக்களப்பு நகரில் அதிக அளவு புகைமூட்டத்துடன் வானிலை காணப்பட்டதை அவதானிக்க முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |