ஹவுதிகளின் தாக்குதல் எதிரொலி: சவூதி அரேபியாவில் அவசரகால எச்சரிக்கை
அண்டை நாடான யேமனில் உள்ள ஹவுதிகளின் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள நிலையில், சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்பு அமைப்பு கடந்த இரண்டு நாட்களில் 15 பொது அவசரகால எச்சரிக்கைகளை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இனி அச்சுறுத்தல் இல்லை என்பதை அதிகாரிகள் உறுதிசெய்தவுடன் சில நிமிடங்களிலேயே அவை திரும்பப் பெறப்பட்டன. சவுதி அரேபியா மீது ஹவுதி அமைப்பினர் மீண்டும் தாக்குதல் நடத்தின.
ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி அமைப்பினருக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி அமைப்பினருக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன.
பதிலடி
ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் ஏமனில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, ஏமனில் உள்நாட்டுப்போர் கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்து வருகிறது. அரசுப்படையினரும், ஹவுதி அமைப்பினரும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மோதலின்போது ஹவுதி அமைப்பினர் அவ்வப்போது சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு சவுதி தலைமையிலான கூட்டுப்படையினர் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சவுதி அரேபியா மீது ஹவுதி அமைப்பினர் நேற்று ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர். சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத், ஜிசன் நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் ரியாத்தில் உள்ள நிதி நிறுவன கட்டிடம் சேதமடைந்தது. அதேவேளை, பெரும்பாலான ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை சவுதி வான்பாதுகாப்பு அமைப்பு நடுவானில் சுட்டு வீழ்த்திவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |