ஜனாதிபதியின் வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆதரவு கிடைக்குமா : இன்று வாக்கெடுப்பு
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (20) மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கடந்த 12 ஆம் திகதி வரவு செலவுத் திட்ட உரை நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.
அதற்கமைய, நவம்பர் 13ஆம் திகதி முதல் இன்று வரை 7 நாட்களுக்கு வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடத்தப்படுகின்றது.
மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம்
அதனைத் தொடர்ந்து, வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழு நிலை விவாதம் நாளை (21) முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அன்றைய தினம் மாலை 6.00 மணிக்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்ந்த சனிக்கிழமை உட்பட ஏனைய அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணிக்கு வரவு செலவுத் திட்ட விவாதத்திற்காகப் நாடாளுமன்றம் கூடவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |