ஈரான் போர் குறித்து ஜி ஜின்பிங் - புடினுடன் கலந்துரையாடல்: ட்ரம்ப் வெளியிட்ட தகவல்
ஈரான் மீதான போர் குறித்து சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோருடன் தாம் கலந்துரையாடியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இணையாக நடைபெற்ற முத்தரப்புச் சந்திப்பின் போது இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்படி விடயத்தை தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகள்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
ஈரான் போர் முடிவுக்கு வர வேண்டும் என அவர்கள் விரும்புவதாகவும் அதனை அவர்கள் ஈரானுக்குத் தெரியப்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இம்முத்தரப்புச் சந்திப்பில் ஈரான் போர் குறித்து விவாதிக்கப்பட்ட போதிலும் பேச்சுவார்த்தைகள் முதன்மையாக உக்ரைன் போரை மையப்படுத்தியே இடம்பெற்றதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இது தொடர்பில் தெரிவித்திருந்த ட்ரம்ப், ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்குச் சீனா அல்லது ரஷ்யாவின் உதவி அமெரிக்காவிற்குத் தேவையில்லை எனத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் ஷென்சென் நகரில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு உச்சிமாநாட்டில் பிராந்தியப் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்துத் தலைவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதன் அடிப்படையில் ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் அமெரிக்கா தனது சொந்தப் பலத்திலேயே தங்கியிருப்பதாக ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |