அடுத்தடுத்த எச்சரிக்கும் வல்லுனர்கள் - மோசமடையும் கிளிநொச்சி - யாழ் மாவட்ட காற்றின் தரம்
யாழ் உள்ளிட்ட பகுதிகளில் வளிமாசடைந்துள்ளதால் வெளியில் செல்ல நேரிடும்போது N95 போன்ற முகக்கவசங்களை கட்டாயம் அணிந்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இன்றைய தினம் தற்போது நிலவுகின்ற சூழல் மாசு தொடர்பான ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே மத்திய சுற்றாடல் அதிகார சபை வடமாகாண அலுவலக பணிப்பாளர் P. துவாரகன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட 'டீமாக்கா' காற்றுச் சுழற்சி மற்றும் எல்லை கடந்த காற்றோட்டச் சுழற்சி காரணமாக, அண்டை நாடுகளில் உள்ள வளி மாசாக்கிகள் இலங்கையின் வான்பரப்புக்குள் நுழைந்துள்ளன.
வளிமண்டலத்தில் பனிமூட்டம்
இதன் காரணமாக தற்போது இலங்கையின் வளிமண்டலத்தில் பனிமூட்டம் போன்ற ஒரு தோற்றப்பாடு காணப்படுகிறது. உலக சுகாதாரப் பணிமனையின் அறிவிப்பின்படி, இந்த வளியின் தரம் 0. 50 வரை ஆரோக்கியமானது. ஆனால், தற்பொழுது இந்த அளவு 150-ஐ விட அதிகரித்து காணப்படுகிறது.

குறிப்பாக, நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் 150 ஆக காணப்பட்ட காற்றின் தரம் வடமாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் இன்று இந்த நிலைமை 198 ஆகவும், கிளிநொச்சி மாவட்டத்தில் 175 ஆகவும் அதிகரித்து பதிவாகியுள்ளது.
இந்த நிலைமை மேலும் இரண்டு, மூன்று நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவரும் அவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வெளியில் செல்ல நேரிடும்போது N95 போன்ற முகமூடிகளை கட்டாயம் அணிந்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக சுவாச நோய்கள் மற்றும் ஒவ்வாமை உள்ளவர்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும். தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |